விபத்தைப் பார்த்தவர்களை நாடும் விபத்துக்குள்ளானவரின் மகன்

யீ‌ஷூன் வட்டாரத்தில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த ஆறு கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தை நேரில் பார்த்தவர்கள் சாட்சி சொல்ல முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதை விடுத்தவர் விபத்தில் சிக்கிய ஆறு காரோட்டி களில் ஒருவரின் மகன் லியோனார்ட் டான். அவரது தந்தை யான 62 வயது திரு டானின் கறுப்பு நிற டொயோட்டா கார் காம்பாஸ் அவென்யூ, யீ‌ஷூன் அவென்யூ 7, செம்பவாங் ரோடு சாலைச் சந்திப்பில் நிகழ்ந்த விபத்தில் சிக்கிக் கொண்டது.

திரு டான் அவசரநிலை ஊழியர்களால் மீட்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.07 மணிக்கு ஃபேஸ்புக்கில் விபத்தை நேரில் பார்த்தவர்கள் சாட்சி சொல்ல முன்வர வேண்டுகோள் விடுத்தார் லியோனார்ட். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரது தந்தை இப்போது வழக்கமான படுக்கைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். "அவரால் இன்னும் அசைய முடியவில்லை. அவரது தலையில் ரத்தக்கட்டி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித் தனர். புலனாய்வு அதிகாரி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாத அளவுக்கு அவர் வலுவிழந்து இருக்கிறார்," என்று லியோனார்ட் கூறியதாக தி நியூ பேப்பர் செய்தி வெளியிட்டது.

ஆறு கார்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் இருவர் காயமுற்று மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். படம்: வான் பாவ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!