திரு லீக்கு நினைவஞ்சலி

சிங்கப்பூரின் தந்தை எனப் போற்றப்படும் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூ மறைந்து ஓராண்டான நிலையில் அவரது முதலாம் ஆண்டு நினைவஞ் சலிக்கு பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு வுடன் இணைந்து சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. சொல்லரங்கம் எனும் அந் நிகழ்வுக்குச் சிறப்பு வருகை அளித்த தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினரும் அடித்தள ஆலோசகரு மான திரு. மெல்வின் யோங், "சிங்கப்பூர் சீன நாடோ, மலாய் நாடோ, இந்தியர் நாடோ அல்ல; இது அனைவரின் நாடு," என திரு. லீ வலியுறுத்தியதை நினைவுகூர்ந்தார்.

மவுன அஞ்சலியுடன் தொடங் கிய சொல்லரங்கிற்கு எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் தலைமையேற்றார். "ஓலைக் குடிசைகள் நிறைந் திருந்த இந்த நாட்டை அண் ணாந்து பார்க்கின்ற மாளிகைகள் நிறைந்த நாடாக உருமாற்றியவர் திரு- லீ என்று குறிப்பிட்ட அவர் இந்த நாட்டை ஒரு 'மெட்ரோ போலிட்டன்' நகரமாக மாற்றிக் காட்டுவேன் என்று திரு. லீ சபதம் செய்தார். அதன்படி மாற்றியும் காட்டினார்," என்று கூறினார் திரு. ஆண்டியப்பன்.

திரு. லீயின் சமத்துவக் கொள்கைதான் அவரை மாபெரும் தலைவராக்கியது என்று பேசிய கவிஞர் பிச்சினிக் காடு இளங்கோ, மாமனிதர் லீ ஒரு DEALER ஆக இல்லாமல் LEADER ஆகச் சுடர்விட்டதை உணர்வுபூர்வமாகச் சொன்னார். வள்ளுவனின் மாணவர் லீ, துன்பத்தில் துன்பம் இன வேற்றுமை என்பதை அறிந் திருந்தார் என்று கூறினார் கவிஞர் இளங்கோ.

பேச்சாளர்கள் சிலருடன் நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங். படம்: ஜெகதீஷ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!