அமைச்சர் சண்முகம்: இளையர்களை நம்புகிறேன்

மர­ண­தண்டனையை முழுமை­யாக சிங்கப்­பூர் அகற்­றுமா?

சட்ட அமைச்­ச­ரு­மான திரு சண்­மு­கத்­தி­டம் இந்தக் கேள்வியை முன்வைத்­தார் நன்யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் பொறி­யி­யல் துறை மாண­வி­யான சேவாள் மீனாட்சி, 23. எழுந்து நின்று கேள்­வி­கேட்­கத் தயக்­க­மாக இருந்தா­லும், உள்­ளுக்­குள் இருக்­கும் கேள்வியை முன்வைக்க வேண்டும் என்ற உந்­து­தல் தனக்கு தைரி­யத்தைத் தந்த­தா­கக் கூறினார் சேவாள். மேலும், மரண தண்டனை தொடர்­பாக சட்டம் சற்றுத் தளர்த்­தப் ­பட்­டி­ருப்­ப­தால், எதிர்­கா­லத்­தில் மர­ண­ தண்டனை இல்லாத நிலை வருமா என அறிய நினைத்­ததாக அவர் சொன்னார்.

இது மனித உரிமை சார்ந்த விஷயம். உயிரைப் பறிப்­பதைவிட ஆயுள் தண்டனை தரலாமே என்பது அவரது கருத்து. இதற்கு பதில் அளித்த அமைச்­சர், மெக்சிகோ போல் போதைப் புழங்­கிகள் நிறைந்த, ஆபத்­தான நாடாக சிங்கப்­பூர் திகழ்­வதை விரும்­பு­கி­றீர்­களா என்று மாண­வர்­களி­டம் கேட்டார். சிங்கப்­பூர் பாது­காப்­பான நாடாக இருப்­ப­தற்கு கடுமை­யான சட்­டங்கள் உத­வு­கின்றன என்று சொன்னார்.

வலுவான தலைமைத்­து­வம், வெளி­நாட்டு ஊழியர் உரிமை­கள் குறித்­தும் மாண­வர்­கள் கேள்­வி­கள் எழுப்­பி­னர். "பல தலைப்­பு­களைப் பற்றி அலசி ஆராய்ந்த இந்த கருத்­த­ரங்கு விரி­வா­ன­தாக இருந்தது. பயங்க­ர­வாதத்தைப் பற்றி அமைச்­சர் கூறியதை ஆமோ­திக்­கி­றேன். நமது இஸ்­லா­மிய சகோ­த­ரர்­களு­டன் இணக்­க­மா­கப் பழ­கு­வதை நிறுத்­தா­மல் ஒரு சமூ­க­மாக ஒற்­றுமை­யாக வாழ்­வ­தால் சமூ­கத்தைப் பிரிக்­கப் பார்க்­கும் பயங்க­ர­வா­தி­களின் திட்­டங்கள் ஏதும் பலிக்­காது," என்று கூறினார் நான்காம் ஆண்டு மாண­வி­யான சேவாள் மீனாட்சி.

* அதி­க­ரித்து வரும் சமூ­கச் ­செ­ல­வு­களில் நிதி­நிலையை சமனாக வைத்­தி­ருக்க வேண்டிய திறன்;

* போதிய பிறப்பு விகிதம் இல்­லா­மல் மூப்­படைந்து வரும் சமூகம்;

* வெளி­நா­டு­களி­லி­ருந்து வரும் போட்­டித்­தன்மை;

* பயங்க­ர­வாதம்.

இவை நான்கும் அடுத்த 50 ஆண்­டு­களில் சிங்கப்­பூர் எதிர்­நோக்­கும் சவால்­கள் என்று கூறிய அமைச்­சர் சண்­மு­கம் அது­கு­றித்து மேலும் விளக்­கினார்:

அண்மைக்­கா­ல­மாக அர­சாங்கம் வர­வுக்கு அதி­க­மாக செலவு செய்­கிறது. மூத்த தலைமுறை சிங்கப்­பூ­ரர்­கள் போதிய அளவு சேமித்து வைத்­தி­ருப்­ப­தால் இது சாத்­தி­ய­மா­கிறது. அந்தச் சேமிப்பை முதலீடு செய்து அதில் இருந்து கிடைக்­கும் வரு­மா­னத்தை அர­சாங்கம் பயன் ­படுத்­து­கிறது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்களிடையே எதிர்காலச் சவால்களை முன்வைத்தார் உள்துறை அமைச்சர் கா. சண்முகம். படங்கள்: திமத்தி டேவிட், கூடுதல் செய்தி: சுதாஸகி ராமன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!