24 மணி நேர ரத்த சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

தேசிய சிறுநீரக அறநிறுவனம் அதன் ஆகப் புதிய 24 மணி நேர ரத்த சுத்திகரிப்பு நிலையத்தைத் திறந்து வைத்துள்ளது. ஜூரோங் வெஸ்ட்டில் அமைந்திருக்கும் இந் நிலையத்தில் முதல்முறையாக இரவு நேர ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை வழங்கப்படும். தாய்லாந்தைச் சேர்ந்த சிரிவதனபக்தி அறநிறுவனம் வழங்கிய 2.2 மில்லியன் வெள்ளி நன்கொடையைக் கொண்டு இந்தப் புதிய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை வழக்கமாக நான்கு மணி நேரத்துக்கு நடத்தப்படும். இரவு நேர ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை ஆறிலிருந்து எட்டு மணி நேரத்துக்கு நடைபெறும். வழக்கத்துக்கு மாறாக உடலில் உள்ள நச்சுகள் மெதுவாக வெளியேற்றப்படுவதால் இம்முறை உடலை அவ்வளவாக வருத்தாது என்று தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மாரடைப்பு ஏற்படும் சாத்தியமும் குறைவு. இரவு நேரத்தில் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை மேற் கொள்வதால் நோயாளிகளால் பகல் நேரத்தில் வேலை செய்ய முடியும். தேசிய சிறுநீரக அறுநிறுவனம் சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் ஏற்கெனவே ஐந்து ரத்த சுத்திகரிப்பு நிலையங்களை நடத்தி வருகிறது. அவற்றில் அதிகபட்ச அளவுக்கு நோயாளி கள் நிறைந்துள்ளனர்.

சிங்கப்பூரில் ஒவ்வோர் ஐந்து மணி நேரத்துக்கு சராசரியாக ஒரு சிங்கப்பூரருக்குச் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுகிறது. புதிய நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தேசிய சிறுநீரக அறநிறுவனம் அதன் ஆகப் பெரிய ரத்த சுத்திகரிப்பு நிலை யத்தைத் திறக்க திட்டம் கொண்டுள்ளதைப் பற்றி அறி வித்தார். இந்த நிலையத்தை அமைக்க 12 மில்லியன் வெள்ளி செலவாகும் என்றும் அது கார்ப்பரேஷன் சாலையில் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆகப் பெரிய நிலையத்தில் 200 ரத்த சுத்திகரிப்பு கூடங்கள் இருக்கும் என்றும் ஒரே நேரத்தில் 2,000 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கலாம் என்றும் தெரி விக்கப்பட்டது.

புதிய 24 மணி நேர ரத்த சுத்திகரிப்பு நிலையத்தில் சிகிச்சை பெறுபவருடன் பேசும் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம். படம்: ஸ்ட்ரெய்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!