தப்பிப் பிழைத்த பிரேசில்

பராகுவே: உலகக் கிண்ணக் காற்பந்து தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் பராகுவேவுக்கு எதிராக மோதிய பிரேசில் டேனி அல்வெஸ் ஆட்டம் முடியும் தறுவாயில் ஒரு கோல் போட தப்பிப் பிழைத்தது. ஆட்டம் தொடங்கிய 39வது நிமிடத்தில் எட்கார் பெனிட்டேஸ் கொடுத்த பந்தை உதைத்து கோல் வலைக்குள் புகுத்தினார் டேரியோ லெஸ்கானோ. பராகுவேவுக்கு எதிராக இரண்டாம் பாதி ஆட்டத்தை முடுக்கிவிட எண்ணிய பிரேசில் பயிற்றுவிப்பாளரான டுங்கா, ஃபெர்னாண்டின்யோவுக்கு பதி லாக ஹல்க் என்பவரைக் களமிறக் கினார்.

ஆனால், அவரின் இந்த முயற் சிக்கு பலன் கிடைக்காமல் பராகுவே இரண்டாவது கோலை போட்டது. பின்னர் ஆட்டம் முடிய 12 நிமிடங்கள் உள்ள நிலையில், ஹல்க் அடித்த பந்தை பராகுவே கோல்காப்பாளரால் பிடிக்க முடியாமல் போக அவர் தட்டிவிட்ட பந்தை ரிக்கார்டோ ஒலிவிரா கோல் வலைக்குள் புகுத்தினார். பின்னர், டேனி அல்வெஸ் போட்ட கோலால் தப்பிப் பிழைத்தது பிரேசில் அணி. ஆட்டத்தின் இந்த முடிவால் பிரேசில் பத்து நாடுகள் கொண்ட தனது பிரிவில் ஆறாவது இடத்தில் உள்ளது. இதனால் பயிற்றுவிப்பாளர் டுங்காவின் வேலைக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பரவலாகப் பேசப் படும் நிலையில் அவர் இதைப் பற்றி ஏளனமாக சிரித்துள்ளார் என்கிறது ராய்ட்டர்ஸ்.

முதல் நான்கு நிலைகளிலுள்ள நாடுகள் இயல்பாகத் உலகக் கிண்ணத் திற்கு தகுதி பெறும் நிலையில் ஐந்தாம் நிலையிலுள்ள நாடு மற் றொரு தகுதிச் சுற்று ஆட்டத்தில் விளையாட வேண்டும். மற்ற ஆட்டங்களில் உருகுவே பெரு நாட்டை 1-0 என்ற கோல் எண்ணிக்கையிலும் அர்ஜெண் டினா பொலிவியாவை 2-0 என் றும் கொலம்பியா எக்குவேடோரை 3-1 என்றும் வெற்றி கண்டன. பொலிவியாவுடனான ஆட்டத் தில் அர்ஜெண்டினாவின் லயனல் மெஸ்ஸி அனைத்துலக காற் பந்தாட்டங்களில் தமது 50வது கோலைப் போட்டு சாதனை நிகழ்த்தினார்.

கடைசி நேரத்தில் கோல் அடித்து ஆட்டத்தைச் சமநிலையில் முடித்த பிரேசில் குழுவின் டேனி அல்வெஸ் (இடமிருந்து 2வது). படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!