கோவை: ஆபாச வார்த்தைகள் கொண்ட பாடல் விவகாரம் தொடர்பாக காவல்துறையிடம் நேரில் முன்னிலையாக அவகாசம் கோரியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத். இது தொடர்பாக கோவை காவல்துறையினரிடம் அவர் சார்பாக நேற்று முன்தினம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், வெளிநாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் ஜனவரி இரண்டாம் வாரத்தில்தான் தம்மால் நாடு திரும்ப முடியும் என அனிருத் குறிப்பிட்டுள்ளார். "குறிப்பிட்ட 'பீப்' பாடல் விவகாரத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. அந்தப் பாடலுக்கு, நான் இசையமைக்கவில்லை என நடிகர் சிம்புவும் கூறியுள்ளார். எனவே காவல் நிலையத்தில் நேரில் முன்னிலையாக எனக்கு மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்," என அம்மனுவில் அனிருத் தெரிவித்துள்ளார். மாதர் சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் அனிருத், சிம்பு மீது கோவை போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டிசம்பர் 19ஆம் தேதி இருவரும் நேரில் முன்னிலையாக போலிசார் சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நேரில் முன்னிலையாக 15 நாட்கள் அவகாசம்: அனிருத் கோரிக்கை
4 Jan 2016 00:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Jan 2016 16:14

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!