செல்ஃபி (தம்படம்) எடுப்பதால் ஏற்ப டும் விபரீதங்களை விவரிக்கிறது 'சண்டிக்குதிரை' என்ற புதிய திரைப்படம். பல்வேறு பத்திரிகைகளில் முந் நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதிய, முன்னணி தொலைக்காட்சித் தொடர்களின் கதாசிரியரான அன்புமதி இப்படத்தை இயக்கியுள்ளார். இது எப்படிப்பட்ட படம் என்று கேட்டால், பெண்ணைப் பெற்ற அப்பாக் கள் எல்லாம் எங்களைப் பாராட்டும் அளவுக்கு கதை சொல்லியிருக்கிறோம் என்கிறார் அன்புமதி. "சின்னத்திரையில் பிரபலமாகி, அதைவிட்டு விலகியிருந்த ராஜ்கமல் இப்படத்தின் நாயகன். கதையைக் கேட்டதும் உடனே படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டார். இந்தப் படத்துக்காக தாடி வளர்த்தல், எடை குறைத்தல் என நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்து, நடித்திருக்கிறார். நாயகி மானசா. குடும்பத் தலைவிகளை நடிப் பால் கவர்வார்.
"எஸ்.பி.பாலசுப்ரமணியம் உருகிப் பாடிய 'நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா' உள்பட ஆறாயிரத்துக்கும் அதிகமான பக்திப்பாடல்களை எழுதிய நண்பர் வாரஸ்ரீயை இசையமைப்பாள ராக அறிமுகப்படுத்துகிறேன். "நகைச்சுவையும் திகிலும் கலந்த இந்தப் படத்துக்கு ஐந்து வருட அவகா சம் எடுத்து திரைக்கதை அமைத் துள்ளேன். "குறிப்பிட்ட ஒரு பாடல் காட்சியை ரசித்து எடுத்துள்ளோம். நாயகன் ஆற் றில் குளித்துவிட்டு, திரும்பி வந்து பார்க்கும்போது ஆடைகளைக் காண வில்லை.
அங்கிருக்கும் பாவாடையை அவசரத்துக்கு எடுத்து உடுத்திக் கொள்கிறான். அவனது சட்டையையும் லுங்கியையும் நாயகி அபகரித்து, உடுத்தியிருப்பதைப் பார்க்கிறான். அப்போது ஒரு மென்மையான பாடல் ஒலிக்கும். "இப்பாடலை பிரசன்னாவும் சைந்த வியும் பாடியிருக்கிறார்கள். அந்தப் பாடலில் பதினைந்துக்கும் மேற்பட்ட குட்டிக் கதைகளைச் சொல்லியிருக் கிறேன். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்," என்கிறார் அன்புமதி.
'சண்டிக்குதிரை' படத்தின் ஒரு காட்சியில் ராஜ்கமல், மானசா.