புகைமூட்ட வாடைக்கு தீ, காற்று காரணம்

சிங்கப்பூரில் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நெருப்பு, புகை மூட்ட வாடையை உணரமுடிந்தது. உள்ளூர்த் தாவர தீச்சம்பவமும் காற்றும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தேசிய சுற்றுப் புற வாரியம் குறிப்பிட்டது. இந்த வட்டாரத்தில் காட்டுத் தீ சம்பவங்கள் குறைந்துவிட்டன. என்றாலும் ஆசியானின் வடக்குப் பகுதியில் இத்தகைய காட்டுத் தீ இடங்கள் அதிகரித்துள்ளன என்று வாரியம் அறிக்கையில் குறிப்பிட்டது. வடக்கு ஆசியானில் இப்போது கோடைக்காலம்.

இத்தகைய அம்சங்களின் காரணமாக காற் றில் தூசுதுகள்கள் காணப்படு கின்றன. இவற்றின் காரணமாக காற்றில் நெருப்பு வாடை உணரப் பட்டது. சில பகுதிகளில் காற்றுத் தூய்மை கெட்டது. இந்த நிலை செவ்வாய்க்கிழமை இரவும் நேற்று அதிகாலையும் சிங்கப்பூரில் நிலவியதாக வாரியம் கூறியது. நேற்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி காற்று தூய்மைக்கேடு 67=82 ஆக இருந்தது. இது மிதமான அளவாகும். அடுத்த 24 மணி நேரத்திற்கும் காற்றுத் தரம் இதே அளவிலேயே இருக்கும் என்று நேற்று வாரியம் தெரிவித்தது.

மழையும் பெய்யாமல் வெப்ப மான பருவநிலை எதிர்பார்க்கப் படுவதாகவும் வாரியம் கூறியது. சிங்கப்பூரில் சென்ற ஆண்டில் படுமோசமான தூசு மூட்டம் நிலவியது. எல் நினோ பருவநிலை காரணமாக சென்ற ஆண்டு செப்டம்பரில் காற்றுத் தூய்மைக்கேடு ஆபத்தான கட்டத்தை எட்டி யது. அதன் காரணமாக தொடக்கப் பள்ளிகளும் உயர்நிலைப்பள்ளி களும் மூடப்பட்டன. இந்தோனீசியாவின் பல பகுதி களிலும் காடுகள் கொளுத்தி விடப்பட்டதால் மூண்ட புகை சிங்கப்பூர், மலேசியா பகுதிகளில் திரண்டதால் படுமோசமான துய்மைக்கேடு ஏற்பட்டு அது பல நாட்களுக்கு நீடித்தது. இந்தோனீசியாவில் காட்டுத் தீயை அணைக்க சிங்கப்பூரும் கைகொடுத்தது. காட்டுத் தீக்கு காரணமான வர்களுக்கு எதிராக நடவடிக் கைகளும் எடுக்கப்பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!