புதிய புறப்பாடத்திட்ட பள்ளியில் ஒவ்வோர் ஆண்டும் 45,000 மாணவர்கள்

சிங்கப்பூரின் புதிய புறப்பாடத்திட் டப்பள்ளிக்கூடத்தின் வளாகம் கோனி தீவின் பரப்பில் 10% அளவுக்கு அதாவது 12 ஹெக்டேர் பரப்பளவில் இருக்கும். அதில் 2020ஆம் ஆண்டு வாக்கில் ஆண்டுக்கு 45,000 மாணவர்கள் ஈடுபடுவார்கள். இது இப்போதைய எண்ணிக் கையைவிட மூன்று மடங்கு என்பது குறிப்படத்தக்கது. கலாசார, சமூக, இளையர் அமைச்சர் கிரேஸ் ஃபூ, நேற்று புலாவ் உபின் தீவில் இருக்கும் புறப்பாடத்திட்ட பள்ளிக்கூடத்தின் வளாகத்துக்குச் சென்றார். அப்போது அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

கோனி தீவின் தென்கிழக்கு முனையில் அமையும் புதிய பள்ளிக்கூடம் அந்தத் தீவை பாசிர் ரிஸ் பகுதியுடன் இணைக்கும் பாலத்துக்கு அருகே இருக்கும். தீவின் எ-ஞ்சிய பகுதி பொதுமக் களுக்குத் திறந்திருக்கும். ஒவ்வோர் இளையரும் தனது பள்ளிப்பருவத்தில் அந்த முகாமுக் குச் செல்லும் வாய்ப்பைப் பெறு வார்கள் என்றும் தீவுக்குச் செல் வோருடன் தோழமையை வளர்த்து சகோதர சக வாழ்வுக்கு ஆதரவாக அந்த வளாகம் இருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். சுற்றுப்புறம் நமக்கு எப்படி எல்லாம் ஆதரவு தருகிறது என் பதையும் சுற்றுப்புறம் செழிப்படைய என்ன செய்யலாம் என்பதையும் பற்றிய உணர்வை அந்த வளாக மாணவர்கள் வளர்த்துக் கொள்வர்.

தனிப்பட்ட முறையிலும் குழு வாகவும் மாணவர்களுக்குச் சவால்களை ஏற்படுத்தும் செயல் திட்டங்கள், வசதிகளை தேடி அவற்றுக்கான யோசனைகளை நாடி உலகம் முழுவதிலும் கண் வைப்பதாகவும் அமைச்சர் குறிப் பிட்டார்.

உபின் புறப்பாடத்திட்ட பள்ளிக்கூடத்தில் செயல்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோருடன் சேர்ந்து அமைச்சர் கிரேஸ் ஃபூவும் (இடது) கயிற்றில் மேலே ஏறும் பயிற்சியில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!