‘பார்கோடு’ தில்லுமுல்லு; ஆடவருக்குச் சிறை

மளிகைக்கடை உரிமையாளர் ஒருவர் பல பேரங்காடிகளின் பொருட்களில் தனது சொந்த 'பார்கோடு' (barcode stickers) வில்லைகளை ஒட்டி குறைந்த விலைக்குப் பொருட்களை வாங்க முயன்றார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சாங் போ போ என்ற அந்த 27 வயது சிங்கப்பூரர், $2,354 தொடர்பான நான்கு ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதேபோன்ற இதர ஏழு குற்றச்சாட்டுகளும் ஏமாற்ற முயன்றதாகக் கூறும் இரு குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டபோது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. எல்லா ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளிலும் சம்பந்தப்பட்ட தொகை $4,282. சம்பவத்துக்குப் பிறகு கோல்டு ஸ்டோரேஜ், ஜயண்ட் ஆகிய இரு நிறுவனங்களுக்கு பணத்தை சாங் திருப்பிக்கொடுத்து விட்டார். சாங் சீன நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவர். அவருக்குப் பெண் குழந்தை ஒன்று இருக் கிறது. அவர் தன் கடையை விற்க முயன்று வருகிறார். ஆகையால் அவரின் தண்டனை ஏப்ரல் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!