பிரதமர் லீ: பால் பொங்குவது போல மகிழ்ச்சி பொங்கட்டும்

கௌரி சந்த்ரா

தை மாதத்தின் முதல் நாளான நேற்று சிங்கப்பூர் முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஆலயங்களில், இல்லங்களில், வெளிப்புற இடங்களில் என எங்கும் பொங்கல் கொண்டாட்ட உணர்வு மேலோங்கி இருந்தது. பிரதமர் லீ சியன் லூங் நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில், "இன்று பொங்கல் பண்டிகை. பொங்கல் கொண்டாடும் எல்லா சிங்கப்பூரர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள் கிறேன்.

"தமிழர்களின் அறுவடைத் திருநாள் பொங்கல் பண்டிகை எனக் கொண்டாடப்படுகிறது. நான்கு நாள் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையில் வீட்டுக்கு வெளியே கோலமிட்டு, கரும்பு கட்டி, புதுப்பானையில் புது அரிசி போட்டு பொங்கல் சாதம் சமைக்கப்படுகிறது. பால் பொங்குவது போல உங்கள் அனைவரது வாழ்க்கையி லும் மகிழ்ச்சி பொங்க எனது நல் வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல்," என்று தெரிவித்துள்ளார்.

ஆலயத்தில் பொங்கல் டெப்போ ரோடு ஸ்ரீ ருத்ரகாளியம்மன் கோயிலில் நேற்றுக் காலை 8.30 மணிக்கு சூரியனுக்குப் பால் பொங்கல், அம்மனுக்குச் சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. கோயில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் என சுமார் 30 பேர் வழிபாட்டில் பங்கேற்றனர் என்றார் கோயிலில் தலைவர் திரு வி.கே. ராமசந்திரா, 79.

"பெரிய எண்ணிக்கையில் பொங்கல் பானைகள் வைத்து கூட்டுப் பொங்கல் வைக்கும் நிகழ்வை நாங்கள் ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். அந்த வகையில் நாளை, ஜனவரி 17ஆம் தேதி சுமார் 50 பானைகள் வைத்து பொதுமக்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதில் பல இன மக்களும் கலந்துகொள்வார்கள் என்றும் கூறினார் திரு ராமசந்திரா.2016-01-16 06:00:00 +0800

லிட்டில் இந்தியா பொங்கல் கிராமத்தில் நேற்றுமாலை முன்னாள் எம்.பி. ரவீந்திரன் (இடமிருந்து 2வது) பொங்கலிடும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

படம்: திமத்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!