மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்து சாதித்த பாரத்

எஸ்.வெங்கடேஷ்வரன்

வழக்கமான பாதையை விடுத்து, பலரும் சென்றிராத வழியைத் தேர்ந் தெடுத்து, துணிச்சலாகவும் தன்னம் பிக்கையுடனும் செல்வோர் சிலரே. அத்தகையோரில் ஒருவர் வர்த்தகத் தொழில் தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் பட்டயக் கல்வி பயின்ற பாரத் செல்லதுரை, 24 (படம்). நன்யாங் பலதுறைத் தொழிற்கல் லூரியில் வர்த்தக, தகவல் தொழில் நுட்பத் துறையில் 3.7 தரப்புள்ளி களுடன் (ஜிபிஏ) பட்டயச் சான்றிதழைப் பெற்ற திரு பாரத், அடுத்து பல்கலைக் கழகத்திற்குச் சென்றிருக்க முடியும். ஆனால், பட்டப்படிப்பை மேற்கொள் ளாமல் வேலை செய்துகொண்டே கற்கும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சம்பாதித் தல், கற்றல் திட்டத்தைத் (Skillsfuture Earn and Learn Programme) தேர்ந்தெடுத்தார். அத்திட்டத்தின் மூலம், புகழ்பெற்ற ‘அக்சன்சுவர்’ நிறு வனத்தில் சேர்ந்து வேலை அனுபவம் பெற்று வருகிறர் திரு பாரத். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹைரூல் ஹக்கீம், செய்தி, படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Feb 2019

ஒரே இலக்கில் உறுதியோடு  பயணம்

கடந்த மாதம், தேசிய நூலக வாரிய வளாகத்தில் அதிகாரத்துவத் தொடக்கம் கண்ட ‘இளமை 2.0’. படத்தில் இளமை 2.0 குழுவினர், மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள். 

18 Feb 2019

இளையர்களை இணைக்கும் ‘இளமை 2.0’