ஹலிமா: இதயத்திலிருந்து பேசுக; நீங்கள் மக்களின் முதல் பிரதிநிதி

சிங்கப்பூரின் 13வது நாடாளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 89 பேர், தொகு தியில்லா உறுப்பினர்கள் இருவர் என மொத்தம் 91 உறுப்பினர்கள் நேற்று தங்கள் பதவிப் பிரமாணப் பற்றுறுதியை எடுத்துக் கொண் டனர். நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு மன்றத்தின் மணி அடித்ததும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்துக்குள் நுழைந்து தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.

மன்ற நிகழ்ச்சி நிரலின் முதல் நடவடிக்கை மன்றத்தின் நாயகரைத் தேர்வு செய்வது. அந்தப் பத விக்கு இரண்டாவது தவணையாக திருவாட்டி ஹலிமா யாக்கோப் உறுப்பினர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருவாட்டி ஹலிமாவை அந்தப் பதவிக்கு அவைத் தலைவர் அமைச்சர் கிரேஸ் ஃபூ முன்மொழிந்தார். உறுப்பினர் செட்ரிக் ஃபூ வழிமொழிந்தார். திருவாட்டி ஹலிமா தேர்வுபெற்ற பிறகு கிரேஸ் ஃபூ உரையாற்றினார்.

"உங்களின் பாரபட்சமின்மை யும் திடமாக முடிவெடுக்கும் திற மையும் மன்ற உறுப்பினர்களின் மரியாதையைப் பெற்றுத் தந்துள் ளன. நாடாளுமன்ற நடவடிக்கை கள் சீராக நடைபெறுவதற்கு உங்கள் கண்டிப்பான செயல்முறை உதவி வருகிறது. உங்கள் வழி காட்டுதலில் மன்றத்தின் விதி முறைகள் சிறப்பாகக் கட்டிக்காக் கப்படுகின்றன," என்று அவைத் தலைவர், மன்ற நாயகருக்குப் புகழாரம் சூட்டினார். மன்ற நாயகர் தேர்வு முடிவுற்றதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிப் பிரமாணப் பற்றுறு தியை எடுத்துக் கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று தங்கள் பதவி பிரமாணப் பற்றுறுதியை நாடாளுமன்ற நாயகரின் முன்னிலையில் எடுத்துக் கொண்டனர். படம்: தொடர்பு தகவல் அமைச்சு

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!