எழுத்தாளர் நா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா

தமிழர் பேரவை தலைமையில் 26 அமைப்புகள் ஒன்றிணைந்து சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா நடத்தின. தமிழக அரசு, மதுரையிலுள்ள உலகத் தமிழ்ச் சங்கம் வாயிலாக வழங்கும் அயலகத் தமிழ் இலக் கியப் பணிகளுக்கான விரு தினை சிங்கப்பூர்த் தமிழ் எழுத் தாளர் கழகத் தலைவர் திரு. நா.ஆண்டியப்பன் அண்மையில் பெற்றார். அவருக்கு கடந்த 5ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச் சாமி அவ்விருதினை வழங்கி னார். அதனுடன் ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வழங் கப்பட்டது. தமிழக அரசு அயலகத் தமிழ் அறிஞர்களுக்கான இத்தகைய விருதினை வழங்கியிருப்பது இதுவே முதல் முறை. அந்த வகையில் 2016ஆம் ஆண்டிற் கான அயலகத் தமிழ் இலக்கிய விருதினைப் பெற்ற முதல் இலக் கியவாதி திரு. நா. ஆண்டியப்பன்.

தொழிலாளர் தினத்தன்று ஆனந்த பவன் உணவக மாடியில் நடந்தேறிய பாராட்டு விழாவில் திரு. நா.ஆண்டியப்பனுடன் அமைப்புகளின் பொறுப்பாளர்கள். படம்: தமிழர் பேரவை

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற இருக்கும் இந்திய
கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இந்தியக் கைவினை, விளையாட்டுகள் நிகழ்ச்சி.
இந்த இலவச நிகழ்ச்சி இம்மாதம் 30, 31வது தேதிகளில் நடைபெறும். சிங்கப்பூர் படம்: மரபுடைமை விழா

18 Mar 2019

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2019