பந்துவீச்சில் கோட்டைவிட்ட இந்தியா

பிரிஸ்பன்: முதல் ஆட்டத்தைப் போலவே இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் ஆஸ்தி ரேலிய அணிக்கு 300க்கு மேல் இலக்கு நிர்ணயித்தும் இந்திய அணிக்கு வெற்றி கைகூடாமல் போனது. ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணி தொடரிலும் 2-0 என முன்னிலைக்குச் சென்றது.

ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் மூன்று டி20 போட்டிகளிலும் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பெர்த்தில் நடந்த முதல் ஆட்டத்தில் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 309 ஓட்டங்களை எடுத்தது. ஆயினும், ஆஸி., அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் தும் ஜார்ஜ் பெய்லியும் சதமடிக்க, இந்திய அணியின் வெற்றி கைநழுவியது.

இந்நிலையில் இரண்டாவது போட்டியில் எப்படியும் வென்று தொடரைச் சமன்செய்ய வேண்டும் எனும் முனைப்புடன் களமிறங்கிய இந்திய அணிக்குப் பூவா தலையாசாதகமாக அமைந்தது. இம்முறையும் முதலில் பந்த டிக்கத் தீர்மானித்த இந்திய அணிக்கு வழக்கம்போல மோச மான தொடக்கம் தந்தார் ‌ஷிகர் தவான். ஆறு ஓட்டங்களில் அவர் வெளியேறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!