இல்லாதோருக்கு உதவ அபாஸின் புதிய வழி

எஸ்.வெங்கடேஷ்வரன்

வசதியில்லாதவர்கள் நிதி உதவி பெறுவதற்கான வழிகளைத் தேடித் தரும் ‘ஒன் லிஸ்ட்’ என்ற இணையத் தளத்தையும், தவணை முறையில் கட்டணம் செலுத்தி பொருட்களை வாங்க உதவும் ‘ரிலை’ என்ற இணைய கடையை யும் உருவாக்கி சாதனை படைத் திருக்கும் 27 வயது இளையர் முஹம்மது அபாஸ். ‘ஃபோர்ப்ஸ்’ என்ற அமெரிக்க வர்த்தக சஞ்சிகையின் கடந்த ஆண்டின் 30 வயதுக்குக் கீழுள்ள ஆசிய சாதனையாளர்கள் பட்டிய லில் நிதித்துறை பிரிவில் இடம் பெற்றிருக்கும் 30 பேரில் அபாஸ் மட்டுமே சிங்கப்பூர் தமிழர்.

பரோட்டா கடை வைத்திருக்கும் அப்பா -முகம்மது அபாஸ் செய்யது இபுராம்சா ஆவார். அம்மா நசிமா பானு குடும்ப மாது. தமிழ்நாட்டி லிருந்து சிங்கப்பூரில் குடியேறிய இருவரும் பள்ளிக்குச் செல்லாத வர்கள். அப்பாவுக்கு உதவியாக அபாஸும் கடையில் வேலை செய் வார். பெற்றோரின் சிரமமான வாழ்க்கை முறையைப் பார்த்து வளர்ந்த அபாஸுக்கு குறைந்த, நடுத்தர வருமான குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிதி நிர்வாகத் தில் உதவ வேண்டும் என்ற எண் ணம் சிறு வயதிலேயே ஏற்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹைரூல் ஹக்கீம், செய்தி, படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Feb 2019

ஒரே இலக்கில் உறுதியோடு  பயணம்

கடந்த மாதம், தேசிய நூலக வாரிய வளாகத்தில் அதிகாரத்துவத் தொடக்கம் கண்ட ‘இளமை 2.0’. படத்தில் இளமை 2.0 குழுவினர், மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள். 

18 Feb 2019

இளையர்களை இணைக்கும் ‘இளமை 2.0’