சவால்களை எதிர்கொள்ள கலைத்திறன்

பரதநாட்டியம், ‘பேலே’, என பல் வேறு நடனங்களில் தேர்ச்சிபெற்ற 24 வயது ரூபலாவண்யா பாலசுப்ர மணியம், கலைகள், கலையரங்கு நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்று பகுதிநேர பட்டப்படிப்பைத் தொடர்வதுடன் நடன ஆசிரிய ராகவும் பணியாற்றுகிறார். ரூபலாவண்யா ஆறு வயதில் பரதநாட்டியம் கற்கத் தொடங்கி னார். அவருக்கு சிறு வயதிலேயே நடனம் மீது அதீத மோகம். அதனால் தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வுக்குப் பிறகு ‘ஸ்கூல் அஃப் த ஆர்ட்ஸ்’ (SOTA) எனப்படும் கலைப் பள்ளி யில் சேர்ந்தார். அங்கு ‘பேலே’ மேற்கத்திய பாரம்பரிய நடனம், தற்கால நவீன நடனம், தென்கிழக் காசிய நடனங்களையும் கற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. நான்கு ஆண்டுகளுக்கு படிப் பையும் நடனத்தையும் ஒரு சேர பயில்வது சவால்மிக்க ஒன்றாக அவருக்குத் இருந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹைரூல் ஹக்கீம், செய்தி, படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Feb 2019

ஒரே இலக்கில் உறுதியோடு  பயணம்

கடந்த மாதம், தேசிய நூலக வாரிய வளாகத்தில் அதிகாரத்துவத் தொடக்கம் கண்ட ‘இளமை 2.0’. படத்தில் இளமை 2.0 குழுவினர், மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள். 

18 Feb 2019

இளையர்களை இணைக்கும் ‘இளமை 2.0’