திறன் அறிந்ததால் வாழ்வில் திருப்பம்

தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியில் ‘மொபைல் அண்ட் நெட்வொர்க்’ துறையில் 3.5 ‘ஜிபிஏ’ புள்ளிகளுடன் தங்க விருது பெற்று மிகச் சிறந்த தேர்ச்சியை அடைந்துள்ள 27 வயது பரதராம் மனோகரன், ஆரம்பத்தில் கல்வியில் ஆர்வமில்லாமல் இருந்தவர். உயர்நிலைக் கல்வியை முடித் ததும் பலதுறைத் தொழிற்கல்லூரி ஒன்றில் தகவல் தொடர்பு துறை யில் இரண்டரை ஆண்டுகள் பயின்றார் பரதராம். உறுதியான இலட்சியம் இல்லாதததால் அவரால் தனக்கு உகந்த வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்க முடியவில்லை.

அதனால் தகவல் தொடர்பு துறையின் மீது அவருக்கு ஆர்வம் குறைந்தது. தனக்குப் பொருத்தமான துறை இதுவல்ல என்ற முடிவுடன் அந்தப் படிப்பைப் பாதியிலேயே விட்டு விட்டார். பின் ஓராண்டு காலம் பகுதி நேரமாக சில வேலைகளைச் செய்தார். பிறகு சிங்கப்பூர் காவல் துறையில் தேசிய சேவை ஆற்றிய போதுதான் அவருடைய வாழ்க்கை யில் திருப்பம் ஏற்பட்டது.

படம்: பரதராம்

மேலும் செய்திகள் 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா

15 Jul 2019

தலைமைத்துவத் தேடலில் இளையர்கள் 

பண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)

08 Jul 2019

வாழ்க்கைக்கும் வழிகாட்டும் கல்வியாளர்கள்