ஜல்லிக்கட்டு கிராமங்களில் பதற்றம்; போலிஸ் குவிப்பு

மதுரை: உச்ச நீதிமன்றத் தடையால் இந்த ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொங்கலன்று (நேற்று) அவனி யாபுரம், மாட்டுப்பொங்கலன்று (இன்று) பாலமேடு, நாளை அலங்கா நல்லூர் என்று வரிசையாக ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம்.

மத்திய அரசு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவால் வாடிவாசல், பார்வையாளர் மேடை அமைப்பது உட்பட பல பணிகள் அதிகாரிகள் முன்னிலையில் தீவிரமாக நடந் தன. உச்ச நீதிமன்றத் தடையால் அனைத்துப் பணிகளும் உடனே நிறுத்தப்பட்டன. ஜல்லிக்கட்டு நடை பெறும் பகுதிகளில் மூன்று நாட் களாக மறியல், உண்ணாவிரதம், கடையடைப்பு என போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஜல்லிக்கட்டு நடக்கவிருந்த பகுதிகளில் நேற்று கறுப்புதினம் கடைப்பிடிக்கப்பட்டது. வாடிவாச லில் கறுப்புக்கொடி கட்டப்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற் படாத வகையில் வன்முறைக்கு இடமின்றி அமைதியான வழியில் போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டம் நடத்துவோர் போலிசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!