சுடச் சுடச் செய்திகள்

புதிய பிழை: ஃபேஸ்புக்கிற்கு மேலும் ஒரு பின்னடைவு

ஃபேஸ்புக் சமூக ஊடகத்தில் கண்டறியப்பட்ட புதிய பிழை அந் நிறுவனத்துக்கு மேலும் பின்ன டைவை ஏற்படுத்தியிருக்கிறது. பயனாளர்களின் தகவல் பகிர் வில் ஏற்பட்ட அப்பிழையை திருத்திவிட்டாலும் ஃபேஸ்புக் அண்மை காலங்களில் சர்ச்சை களுக்கு ஆளாகி வருவது குறிப் பிடத்தக்கது. ஃபேஸ்புக்கின் புதிய பிழை அதன் பயனாளர்களின் தனிப் பட்ட தகவல்களை பொதுவெளி யில் பதிவிட்டிருக்கிறது.

இந்தப் பிழை இருந்தபோது ஃபேஸ்புக் போஸ்ட் பதிவிட்டோர், அதனை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென கட்டுப் பாடுகளைக் குறிப்பிட்டு இருந் தாலும் அனைவருக்கும் பகிர்ந்து இருக்கிறது. புதிய வசதிக்கான மென் பொருள் சோதனையின் போது நடந்த கோளாற்றால் இந்தப் பிழை ஏற்பட்டதாகவும் இதனால் கடந்த மாதம் 18ஆம் முதல் 22ஆம் தேதி வரை 14 மில்லியன் பயனாளர்கள் பாதிக்கப்பட்டதாக வும் ஃபேஸ்புக் நிறுவனம் இம் மாதம் 7ஆம் தேதி கூறியது. ஆனால், இந்தப் பிழை எப்படி அறியப்பட்டது என்பதை அது தெரிவிக்கவில்லை என்றாலும் மே 27ஆம் தேதி பிழை திருத்தப் பட்டது என்று கூறியது.

மேலும் செய்திகள்