ஐந்து லட்சம் பயணிகளால் சென்னையில் கடும் நெரிசல்

சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் நேற்று தொடங்கியது. நான்கு நாள் பண்டிகையான பெங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து ஏராள மானோர் கடந்த 9ஆம் தேதியில் இருந்தே தங்கள் சொந்த ஊருக்கு புறப்படத் தொடங்கிவிட்டனர். இதனால், கோயம்பேடு பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலை யம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கோயம்பேடு பேருந்து நிலையத் தில் இருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சொந்த ஊர் செல்ல மக்கள் திரண்டதால் இரவு நேரங்களில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. வடபழனி சாலையில் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டதால், ஏராளமானோர் மெட்ரோ ரயில் மூலம் கோயம்பேடு சென்ற னர். கோயம்பேடு பேருந்து நிலை யத்தைக் கடந்து செல்ல சுமார் 2 மணி நேரம் வரை ஆனது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!