நோன்புப் பெருநாள் கொண்டாடும் புதுமணத் தம்பதி

அப்துல் ரஹீமும் (இடக்கோடி) ரிஸ்வானா பேகமும் (இடமிருந்து நான்காவது) தம்பதியராக இணைந்து கொண்டாடும் முதல் நோன்புப் பெருநாள் இது. ரமலான் மாதத்தில் சமூகத்தில் உதவி தேவைப்படுவோருக்கு உணவு, பரிசுக் கூடை, பற்றுச்சீட்டுகள் வழங்கும் இந்திய முஸ்லிம் சமூக சேவை சங்கத்தின் திட்டத்தில் தம்பதியர் இருவரும் தங்களை இணைத்துக்கொண்டு, தொண்டூழியத்தில் ஈடுபட்டனர். மாதம் முழுவதும் குடும்பத்தினருடன் ஒன்றுசேர்ந்து நோன்பு திறந்து ரஹீம்=ரிஸ்வானா தம்பதியர் குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தினர். இன்று தங்களின் பெற்றோர்கள், உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று பெருநாளை விமரிசையாகக் கொண்டாட தம்பதியர் திட்டமிட்டுள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற இருக்கும் இந்திய
கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இந்தியக் கைவினை, விளையாட்டுகள் நிகழ்ச்சி.
இந்த இலவச நிகழ்ச்சி இம்மாதம் 30, 31வது தேதிகளில் நடைபெறும். சிங்கப்பூர் படம்: மரபுடைமை விழா

18 Mar 2019

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2019