சந்திப்பு முடிந்தது; சிரமமான பணி இனி தொடங்கும்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் ஒருவருக்கு ஒருவர் வசைபாடி, தங்கள் நாடுகளிடம் உள்ள அணுவாயுதங்களின் அளவு குறித்து பெருமையுடன் பேசி சில மாதங்களே ஆன நிலையில் அவ்விருவரும், அமைதிக்காகக் கைகோத்து, வாய்நிறைய வாழ்த்துகள் கூறி, நூறாண்டு காணாத அதிசயமாக வரலாற்றுச் சிறப்புமிக்க உச்ச நிலைச் சந்திப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். அந்தக் கண்கொள்ளாக் காட் சியைக் கண்டு உலகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது ஒருபக்கம், வியப்பில் ஆழ்ந்தது மறு பக்கம்.

அமெரிக்காவும் வடகொரியாவும் பல் லாண்டுகாலமாக ஒன்றுக்கு ஒன்று விட்டுக் கொடுக்காத பகைமை பாராட்டும் நாடுகளாக இருந்து வந்துள்ளன. ஆனால் சித்தாந்த ரீதியில் எதிர் எதிர் அணியில் இருந்த இந்நாடுகளின் திடீர் சந்திப்பு அமைதிக்கான நம்பிக்கையாக உருவெடுத்துள்ளது. இந்தச் சந்திப்பில் வடகொரியாவுக்கு பாது காப்பு உறுதிகளை அதிபர் டிரம்ப் வழங்கி உள்ளார். பதிலுக்கு தலைவர் கிம் கொரியத் தீபகற்பத்தில் முழுமையான அணுவாயுதக் களைவுக்கான தமது கடப்பாட்டை மறுஉறுதிப் படுத்தியுள்ளார். இவர்களின் கூட்டறிக்கை மாதக்கணக் கில் உருவான ஒன்றல்ல. மாறாக, இது சில வாரங்களில் உருப்பெற்ற ஒன்று. அதில் அந்தத் தலைவர்களின் உறுதிமொழிகள் செயல்படுத்தப்படுவது குறித்த விவரங்கள் எதுவும் இல்லை.

மேலும் செய்திகளுக்கு