சாதிக்கத் துடிக்கும் பிரேசில் குழுவினர்

ப. பாலசுப்பிரமணியம்

ஐரோப்பிய முன்னணிக் குழுவான ஹாலந்து குழு இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இடம்பெறாதது காற்பந்து ரசிகர்கள் சிலருக்குப் பெருத்த ஏமாற்றம். அதைவிடப் பெரிய ஏமாற்றம் உலகக் கிண்ணத்தை நான்கு முறை வென்ற இத்தாலி போட்டியில் இடம் பெறாததுதான். இவ்விரு காற்பந்துச் சிங்கங் களும் போட்டியில் இல்லாவிட்டாலும் ரஷ்யாவில் நடந்துவரும் உலகக் கிண்ணப் போட்டியைப் பார்ப்பதற்கு போதிய காரணங்கள் உள்ளன.

‘சம்பா’ காற்பந்துக்கு பெயர் போன பிரேசில் குழு பழிவாங்குவதற்காக துடித்துக்கொண்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் தன் சொந்த மண்ணில் 7-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மானியக் குழுவிடம் தோல்விகண்ட விதம் காற்பந்து உலகையே அதிர்ச்சியடைய வைத்தது.

இம்முறை, அதுபோன்ற நிகழ்வுக்கு சாத்தியமில்லாதபடி தற்காப்பிலிருந்து தாக்குதல் வரையில் எல்லா நிலை களிலும் தன்னை வலுப்படுத்திக் கொண்டுள்ளது பிரேசில் குழு.

பிரேசிலின் நட்சத்திர நாயகன் நெய்மாருக்கு கோல் வாய்ப்புகளை உரு வாக்கித் தர, கொட்டின்யோ, வில்லியன், கேப்ரியல் ஜீசஸ் போன்ற ஆட்டக்காரர்கள் காத்தி ருக்கின்றனர். தியாகோ சில்வா, மார்செலோ போன்ற தற்காப்பு ஆட்டக் காரர்களும் தாக்குதல்களுக்கு உதவக் கூடியவர்கள்.

ஊடகங்களின் கவனம் அனைத்தும் பிரேசில் மீது இருக்க, கடந்த உலகக் கிண்ண வெற்றியாளரான ஜெர்மானிய குழுவையும் எளிதில் எடைபோட முடியாது.

அண்மைய சில நட்புமுறை ஆட்ட முடிவுகள் அதற்கு சாதகமாக விளங்கா விட்டாலும் உலகக் கிண்ணப் போட்டி தொடங்கும்போது ஜெர்மானிய குழு மற்ற குழுக்களை வேரோடு அழித்து விடும் ஆற்றல் கொண்டது. அதனை ஐந்து முறை உலகக் கிண்ணத்தை வென்றுள்ள பிரேசில் குழு நன்கு உணரும்.

மேலும் செய்திகள்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்தாண்டு தேசிய அளவிலான பள்ளிப் போட்டிகளில் 4x400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் பங்குபெற்ற ஷான் ஆனந்தன், 15. படம்: சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி

25 Mar 2019

கனவு நனவாகும் வரை கடும் பயிற்சிக்கு தயார்

மாணவர்கள் கேளிக்கைச் சித்திரங்களாகத் தரப்பட்ட கதையைப் புரிந்துகொண்டு அதன் தொடர்பில் பாரதியார் கவிதை வரிகளை இணைப்பது, சிறுகதை எழுதுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
படம்: எர்பன் ஷட்டர்ஸ்

25 Mar 2019

மாணவர்கள் ஆராய்ந்த  உள்ளூர் தமிழ் இலக்கியம்