சிங்கப்பூர் இலக்கியப் பரிசு; இறுதிப்பட்டியலில் 50 நூல்கள்

இந்த ஆண்டின் சிங்கப்பூர் இலக் கியப் பரிசுக்கான இறுதிப்பட்டியலில் நான்கு மொழிகளிலும் மொத்தம் 50 நூல்கள் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூர் புத்தக மன்றம் ஈராண்டுகளுக்கு ஒருமுறை தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் ஆகிய நான்கு மொழிகளிலும் புதினம், கவிதை, புதினமல்லாதவை என மூன்று பிரிவுகளில் இப்பரிசை வழங்கி வருகிறது. இறுதிப் பரிசீலனைக்கான பட்டியலை தேசிய புத்தக மன்றம் நேற்று வெளியிட்டது. தமிழில் மூன்று பிரிவுகளிலும் மொத்தம் 11 நூல்கள் தேர்வுபெற்றுள்ளன.

புதினப் பிரிவில் சித்ரா ரமே‌ஷின் ‘ஒரு துளி சந்தோஷம்’, எம்.கே.குமாரின் ‘5.12’, பிரேமா மகாலிங்கத்தின் ‘நீர்த் திவலைகள்’ ஆகிய நூல்களும் கவிதைப் பிரிவில் அ.கி.வரதராஜனின் ‘லீ குவான் இயூ பிள்ளைத் தமிழ்’, எம்.சேகரின் ‘இராவணனின் சீதை’ ஆகிய நூல்களும் தேர்வு பெற்றுள்ளன. புதினமல்லாதவை பிரிவில் பாலபாஸ்கரனின் ‘கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும்: இன்றைய பார்வை’, சித்ரா ரமே‌ஷின் ‘ஆட்டோகிராப்’, எம்.சேகரின் ‘எழுத்தும் வண்ண மும்’ ஆகியவை தேர்வு பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்