அனார்கலியின் பொங்கல் பரிசு

முஹம்­மது ஃபைரோஸ்

பொங்கல் பண்­டிகையை முன்­னிட்டு சையது முஹம்­மது டிரே­டர்ஸ் (சிங்கப்­பூர்) நிறு­வ­னம் வாடிக் கை­யா­ளர்­களின் தொடர் ஆத­ர­வுக்கு நன்றி செலுத்த அன்­ப­ளிப்பு வழங்­கு­கிறது. அனார்­கலி உணவுப் பொருட்­களின் விநி­யோ­கஸ்­த­ரான இந்­நி­று­ வ­னம் தமிழ் முரசு நாளி­த­ழு­டன் இணைந்து ஒரு கிலோ அனார்­கலி பொன்னி அரிசி, 200 கிராம் பாசிப் பருப்பு, ஒரு கட்டு அப்­ப­ளம் ஆகிய பொருட்­களை உள்­ள­டக்­கிய $4 மதிக்­கத்­தக்க அன்­ப­ளிப்­புப் பொட்­ட­லங்களை வழங்க­வுள்­ளது.

நாளை ஞாயிற்­றுக்­கிழமை தேக்கா நிலைய பேருந்து நிறுத்­தத்­துக்கு அருகில் உள்ள செய்­தித் ­தாள் விற்­பனை­யா­ள­ரி­ட­மி­ருந்து வாங்கும் ஒவ்வொரு தமிழ் முரசு பிர­திக்­கும் அன்­ப­ளிப்­புப் பொட்­ட­லம் இல­வ­ச­மாக வழங்கப்­படும். நாளை காலை 8.30 மணி­ய­ள­வில் பொட்­ட­லம் விநி­யோ­கிக்­கப்­படும் என்றும் தமிழ் முரசு நாளிதழை வாங்கும் முதல் 500 வாச­கர்­களுக்கு அது வழங்கப்­படும் என் றும் சையது முஹம்­மது டிரே­டர்ஸ் நிறு­வ­னம் தெரி­வித்­தது.

சென்னை வெள்­ளத்தைத் தொடர்ந்து பொன்னி அரிசி, பருப்­பு­களின் விலைகள் அதி­க­ரித்­ துள்­ள­தாக நி­று­வ­னத்­தின் இயக்­கு­நர் திரு ஜாஃபர் சாதிக் குறிப்­பிட்­டார். "கடந்த 30 ஆண்­டு­க­ளாக அனார்­கலிக்கு ஆதரவு அளித்து வரும் வாடிக் கை­யா­ளர்­களுக்கு நன்றி செலுத்­தும் விதத்­தில் இந்த அன்­ப­ளிப்பை வழங்­கு­கி­றோம்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!