இனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்

இலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான போரில் இருமுனை உத்தி கடந்த இரண்டு ஆண்டு களாகவே சிங்கப்பூரில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் இலக்கு தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது - தற்போதைய நிலையில் சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 400,000 பேரையும் 2050ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் பேரையும் பாதிக்கக்கூடிய நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடி வெற்றி கொள்வது. பார்க்கப்போனால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் பலனைத் தரத் தொடங்கி யுள்ளன. உடல்நலத்தின் மீது அக்கறை கொண்ட சிங்கப்பூரர்கள் ஏற்கெனவே சுகாதாரமான உணவு முறைக்கு மாறி, உடற் பயிற்சியுடன் மருத்துவ பரிசோதனையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், இனிப்பு சாப்பிடுவது பழகிப் போய்விட்டதால், இதுபோன்ற முன்னேற்றங் களால் பெரிய அளவிலான பலன் இல்லை. சிங்கப்பூர் போன்ற வசதியான சமுதாயத்தில் உணவுக்கு பின் இனிப்பான பானம் அருந்து வது வாடிக்கையாகிவிட்டது. எனினும், பதப் படுத்தப்பட்ட, வாடிக்கையாளர்களை ஈர்ப் பதற்கென்றே அதிக அளவில் இனிப்புக் கலந்த பானங்களை அருந்துவது வாடிக்கை யாகிவிடக் கூடாது. ஏனெனில் இவை மீண்டும் மீண்டும் குடிக்கத் தூண்டி நமக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக் கின்றன.

போதைப் பொருள் சட்டவிரோதமானது, புகைபிடிப்பது சுகாதாரக் கேடு, மதுபானம் உடலையும் மனதையும் பாதிக்கக்கூடியது, உணவில் அதிக உப்பு சேர்ப்பதுகூட இப் பொழுதெல்லாம் வழக்கமான ஒன்றல்ல. ஆனால், உணவுக் கலாசாரத்தில் இனிப்பு என்றால் சீனிப் பயன்பாடுதான் நம் கண்முன் நிற்கிறது. இதனால்தானோ என்னவோ புகைபிடிப்பது, மது அருந்துவது, ஏன் அதிக அளவில் உப்பு சேர்த்துக்கொள்வதையும் வழக்கமான ஒன்று என ஏற்றுக்கொள்ளா பெற்றோர் தங்கள் பிள்ளைகள் இனிப்பு அதிகமுள்ள பானங்களை குடிப்பதை தடுப்ப தில்லை.

கலாசார பழக்க வழக்கங்களை மாற்றுவது எளிதல்ல. ஆனால், நமது இளைய தலை முறையினர் உய்ய, வாழ்வில் உயர வேண்டுமாயின் அவற்றில் சிலவற்றை நாம் குழி தோண்டிப் புதைக்கத்தான் வேண்டும். சீனிக்கு வரி விதிப்பது, உணவுப் பொருட் களில் சீனியின் அளவை குறிப்பிட்டு கூறு வது போன்ற நடவடிக்கைகள் மாற்றம் ஏற்பட உதவும். இதேபோலவே உணவு அங்காடிக் கடைகளில் தற்பொழுது அதிக அளவில் கிடைக்கும் சுகாதாரமான உணவு வகைகளும் உதவக்கூடும்.

இவை ஒருபுறம் இருக்க, குடிநீர் தாராள மாகக் கிடைக்க உதவுவது, பொது இடங்கள், பூங்காக்கள், உணவு அங்காடிக் கடைகள், சொல்லப் போனால் பேருந்து நிறுத்தங்கள் போன்ற இடங்களிலும் குடிநீர் தாராளமாகக் கிடைக்குமாயின் நீரிழிவு நோய்க்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க திருப்பத்தை ஏற்படுத்தலாம்.

இதுபோன்ற இடங்களில் குடிநீர் கிடைத் தால் மக்கள் இதை விரும்பி ஏற்கும் பழக்கம் உருவாகும் என்று நம்பலாம். இது எவ்வள வுக்கு எவ்வளவு கண்ணுக்குப் புலப்படும் வகையில் இருக்கிறதோ அந்த அளவுக்கு மக்கள் காசு கொடுத்து வாங்கும் பானங் களைத் தவிர்ப்பர்.

நீரிழிவு நோய் ஓர் அமைதியான உயிர்க் கொல்லி நோய். அது தொடர்புடைய மற்ற நோய்களும் அவற்றால் ஏற்படக்கூடிய பிரச் சினைகளையும் நாம் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

இதற்காக நாம் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக் கைகள் அதிக செலவுக்கு வழிவிடலாம். எனினும், இதில் பான உற்பத்தியாளர்களா கட்டும், கடைத் தொகுதி உரிமையாளர்கள் ஆகட்டும், நிறுவனங்கள், போக்குவரத்து நடத்துனர்கள் என அனைவரும் தங்கள் பங்கை ஆற்றலாம்.

ஆனால், சிங்கப்பூரர்கள் சுகாதாரமான தெரிவுகளை மேற்கொள்வதற்கு வழிகாட்டும் குறிப்பாக விளங்குவது அவர்கள் தங்கள் வீடுகளில் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதுதான்.

பெற்றோர், தாங்கள் மேற்கொள்ளும் உணவு, வாழ்க்கைமுறை பழக்க வழக்கங்க ளையே அவர்களின் பிள்ளைகளும் இயற்கை யாகவே கடைப்பிடிக்கும் நிலை தோன்றுகிறது. இளையர்களுக்கு உடல் சுகாதாரம், சுகா தாரமான வாழ்க்கைமுறையினால் ஏற்படக் கூடிய பலன்கள், ஆகியவை பற்றி அவர்கள் உணரும்படி செய்வது வாழ்க்கையில் அவர் கள் தேர்வு செய்யும் வழிமுறையை முடிவு செய்ய உதவும்.

- ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்