சுடச் சுடச் செய்திகள்

பக்கவாதம்: மீண்டு வர உதவும் பயிற்சிகள்

பக்கவாதம் ஒருவரை முடக்கி வைக்கும் கொடிய நோய். அந்த நோயால் பாதிக் கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வர சில பயிற்சிகள் கைகொடுக்கின்றன. மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைப் படும்போது பக்கவாதம் ஏற்படுகிறது. இதன் விளைவாக தசைகளை அசைப் பதில் சிரமம் ஏற்படலாம். பக்கவாதத்திலிருந்து மீண்டு வர நீண்டகாலம் எடுக்கலாம். அன்றாடப் பயிற்சித் திட்டத்தைக் கடைப்பிடித்தால் பாதிக்கப்பட்டுள்ள கை, கால்களைக் குணப்படுத்துவதைத் துரிதப்படுத்தலாம்.

“கை, கால்களுக்கு அசைவு கொடுக்கும் உடற்பயிற்சிகளைத் தினமும் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதுமட்டுமல்லாது வலி, வீக்கம் ஆகியவற்றை அது குறைக்க உதவும். மேலும் தசைகளுக்கு வலுவூட்டும்,” என்று பராமரிப்பாளர் களுக்காகப் பயிற்சி வழங்கும் ஆக்டிவ் கிளோபல் கேர்கீவர்ஸ் அமைப்பின் திருவாட்டி ரேவதி மீனா தெரிவித்தார். ஒருவருக்குப் பக்கவாதம் ஏற்பட்ட வுடன் அதிலிருந்து மீண்டு வர உடனடியாகப் பயிற்சிகளைச் செய்வது முக்கியம் என்றும் அவ்வாறு செய்தால் குணமடைவது மட்டுமல்லாது இரண்டாவது முறையாகப் பக்கவாதம் ஏற்படும் சாத்தியத்தைத் தவிர்க்கலாம் என்றும் திருவாட்டி ரேவதி தெரிவித்தார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதிலிருந்து மீளும் நோக்கத் துடன் உடற்பயிற்சி செய்யும்போது அவருக்குத் துணையாகப் பராமரிப்பாளர் ஒருவர் இருப்பது முக்கியம்.

அப்போது தான் உடற்பயிற்சி செய்யும்போது அவர் கீழே விழாமல் பார்த்துக்கொள்ளலாம். பக்கவாதத்திலிருந்து மீண்டு வருவதற்கு ஒரு சில பயிற்சி வகைகளை திருவாட்டி ரேவதி மேற்கோள் காட்டினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon