500 மில்லியன் பயணிகளைக் கொண்டாடிய ஏர் ஏஷியா

அண்மையில் மலேசியாவின் நடைபெற்ற அரசியல் மாற்றம் தாம் மிகவும் வரவேற்கும் ஒன்று என்றும் இனி மலேசியாவும் நல்ல காலம்தான் என்று கூறியுள்ளார் ஏர் ஆசிய விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு டோனி ஃபெர்னெண்டெஸ்.

மலேசியாவின் ஏர் ஆசியா விமானம் செயல்பட்டுவரும் 16 ஆண்டுகளில் இதுவரை மொத்தம் 500 மில்லியன் பேர் பயணித்துள்ளனர். அந்த மைல்கல்லைக் கொண்டாடவும் அந்த 500 மில்லியன் பயணியாக பயணித்த தாய்லாந்து நாட்டவருக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கவும் தாய்லாந்தில் கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றை ஏர் ஏஷியா விமானம் ஏற்பாடு செய்தது. அந்த நிகழ்ச்சிக்கு முன்னால் செய்தியாளர்களிடம் திரு டோனி பேசினார்.

தற்போது மலேசியா பொன்னான காலத்தில் உள்ளது என்றும் அது தமக்கு மகிழ்ச்சியே என்றும் அவர் சொன்னார்.
மலேசியாவின் அரசியல் களம் மாறியுள்ள நிலையில் அங்குள்ள மலிவு விலை விமானப் போக்குவரத்துத் துறைக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கும் என நம்புகிறார் திரு டோனி ஃபெர்னெண்டெஸ்.

மலேசியாவின் பினாங்கு, கோத்தா கினபாலு, குச்சிங் போன்ற இடங்களில் மலிவான பயணிகள் கட்டணத்திற்கவும் மலிவு விமான சேவைகளுக்கான விமான நிலையங்களுக்காகவும் தாம் பல கால கோரி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நட்டத்தில் இருந்த ஏர் ஆசியா விமான சேவையைத் திரு டோனியும் அவரது வர்த்தக பங்காளிகளும் கடந்த 2001 ஆம் ஆண்டு வாங்கியபோது இரண்டு விமானங்கள் மட்டுமே செயல்பட்டன. தற்போது 200க்கும் மேற்பட்ட ஏர் ஏஷியா விமானங்கள் 130க்கும் மேற்பட்ட இடங்களுக்குப் பறக்கின்றன.
தற்போது மலேசியா, கோலாலம்பூருக்கு இடையே உள்ள விமானப் போக்குவரத்தே அனைத்துலக ரீதியில் ஆக அதிகமானது என்று பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வு ஒன்று தெரிவித்தது.

ஏர் ஆசியாவின் 500 மில்லியன் பணி எனும் பெருமையைப் பெற்றார் தாய்லாந்தைச் சேர்ந்த டாக்டர் பனுட் ஒப்ராசெர்ட்ஸாவாட். அவர் மார்ச் 18ஆம் தேதிப் புக்கெட்டிலிருந்து பாங்காக் சென்றபோது ஏர் ஆசியாவின் 500 மில்லியன் பயணி ஆனார்.

அவருக்குப் பரிசாக 3 மில்லியன் ஏர் ஆசிய ‘பிக்’ புள்ளிகளும் 50,000 தாய் பாட்டும் வழங்கப்பட்டன. இந்தப் புள்ளிகளை டாக்டர் பனுட் ஏர் ஆசியா விமான டிக்கெட்டுகள் வாங்ப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
எனினும் டாக்டர் பனுட்டும் அவரது மனைவியும் அவர்களது வாழ்நாள் முழுவதும் ஏர் ஆசியா விமானத்தில் எங்கு வேண்டுமானாலும் இலவசமாகப் பயணிக்கலாம் என்று திரு டோனி திடீரென மேடையில் அறிவித்து டாக்டர் பனுட்டை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

06 May 2019

test

17 Apr 2019

eee

17 Jan 2019

Test content