$34பி. கட்டுமான ஒப்பந்தங்கள்

இவ்வாண்டில் 27 பில்லியன் வெள்ளியிலிருந்து 34 பில்லியன் வெள்ளி வரையிலான கட்டுமான ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித் துள்ளது. அவற்றில் 65 விழுக்காடு ஒப்பந்தங்கள் அரசாங்கத் துறை யால் வழங்கப்படும் என்று கூறப் படுகிறது.

இந்த முன்னுரைப்பு உண்மை யாகும் பட்சத்தில் 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே அரசாங்கத் துறை வழங்கும் ஆக அதிகமான கட்டுமான ஒப்பந்தங்கள் ஆகும். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கட்டுமான ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ஏறத்தாழ 27.2 பில்லியன் வெள்ளி.

அவற்றில் பாதிக்கும் அதிக மான ஒப்பந்தங்கள் அரசாங்கத் துறையால் வழங்கப்பட்டவை. கட்டுமான ஒப்பந்தங்களைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டுக்கான முன்னுரைப்பு 29 பில்லியன் வெள்ளியிலிருந்து 36 பில்லியன் வெள்ளி வரை என இருந்தது.

ஆனால் சில முக்கிய பொது உள்கட்டமைப்பு ஒப்பந்தங்கள் தொடர்பாக சில மாற்றங்கள் செய்யப்பட்டதால் அந்த இலக்கை அடைய முடியாத நிலை ஏற்பட்ட தாக ஆணையம் கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!