வெற்றிக்குப் பல பாதைகள் உண்டு

இந்திராணி ராஜா

ஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை விவாதிக்கவிருக்கிறோம். ஒவ்வொரு பெற்றோருக்கும் முக்கி யமானதொரு தலைப்பு கல்வி. நம் பிள்ளைகள் சிறந்த கல்வி பெற்று, நல்ல வேலைகளில் சேரவேண்டும் என நாம் விரும்புவோம். அதே சமயத் தில், போட்டித்தன்மை, தேர்வால் ஏற் படும் மன உளைச்சல், நம் பிள்ளை களால் இளம்பிராயத்தையும் இளமைப் பருவத்தையும் மகிழ்ச்சியாக அனுப விக்க முடியுமா போன்ற அக்கறைகள் பல பெற்றோர்களுக்கு உள்ளது.

அரசாங்கத்திற்கும் இந்த அக்கறை உண்டு. கடந்த சில ஆண்டுகளில், இவ்விவகாரங்களுக்குத் தீர்வு காணும் வகையில் நமது கல்வி முறையில் பல முக்கிய மாற்றங்களைச் செய்திருக் கிறோம்.

பழைய கல்வி முறை மதிப்பெண்களி லேயே அதிக கவனம் செலுத்தியது. இதனால், பிள்ளைகளுக்குக் குறிப் பிட்ட சில பள்ளிகளில் இடம் கிடைக் காவிட்டால் அவர்களின் வருங்காலம் மங்கிவிடும் என்ற அச்சம் எழுந்தது.

உயர்நிலைப் பள்ளியில் விரைவு நிலைக்குத் தகுதிபெறாத பிள்ளை களால் வாழ்க்கையில் வெற்றி அடைய முடியாது என்ற கவலையும் நிலவுகிறது. வெற்றிக்கு ஒரே ஒரு பாதை மட்டுமே இருக்கிறது என்ற எண்ணமே இந்தப் பயத்திற்கும் கவலைக்கும் காரணம். ஆனால், உண்மையில் வெற்றிக்குப் பல பாதைகள் உண்டு.

மேலும் செய்திகள்