உழைக்கும் கரங்களுக்கு வாழ்வில் வெற்றி நிச்சயம்

எஸ். வெங்கடேஷ்வரன்

உழைப்புக்கு எதுவும் தடையில்லை என்பதற்கு 17 வயது ஹரிஷ் கணேசன் சான்றாக இருக்கிறார். ‘ஆட்டிசம்’ எனப்படும் மதி இறுக்கத்துடன் பிறந்த அவர், பல்வேறு இடங்களில் பணி புரிந்து, இப்போது உணவு, பானத் துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளார். தமது 14வது வயதிலிருந்து பகுதி நேர வேலைகள் செய்ய ஆரம்பித்த திரு ஹரிஷ், முதல் அனுபவமாக கூ டெக் புவாட் மருத்துவமனையில் இருக்கும் ‘ஏபல் ஸ்டுடியோ’ என்னும் மருந்தகத்தில் கிட்டத்தட்ட ஒன்பது மாத காலம் பணி புரிந்தார். அதன்பின், ‘ஜயண்ட்’ பேரங்காடியில் 7 மாதங்களுக்கு பகுதிநேர ஊழியராகப் பணி புரிந்தார். அங்கு பொருட்களை ஒன்றாகச் சேர்த்துக் கட்டுதல், சுத்தம் செய்தல் போன்ற பணிகளைப் புரிந்தார். பின்னர், ‘குட் தயிம் பிஸ்ட்ரொ’ என்னும் உணவகத்தில் உணவு பரி மாறும் வேலையைச் செய்தார். உணவுத் துறையில் ஹரிஷ் முதன் முறையாக அடியெடுத்து வைத்தது ‘குட் தயிம் பிஸ்ட்ரொ’வில் தான்.

‘சீட்ஸ்’ உணவகத்தில் காப்பி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஹரிஷ் கணேசன். படம்: ‘சீட்ஸ்’ உணவகம்