மாதம் முழுதும் வாசிப்பு விழா

ருபனேஸ்வரன் ஞானசுப்ரமணியம்

‘ஆழ்ந்த கற்பனைகளோடு கதைகளை எழுதுவது எப்படி? திகிலூட்டும் கதைகளைச் சுவை யாகப் படைப்பது எப்படி?’ என்பது போன்ற கேள்விகளுக்குப் பதி லளிக்கும் வகையில் அமைந்தது பிரபல கதையாசிரியர் இந்திரா சௌந்தர்ராஜனுடன் நடத்தப்பட்ட சிறப்புக் கலந்துரையாடல். சென்ற மாதம் 24ஆம் தேதி தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களிடையே தமிழ்ச் சிறுகதைகளை எழுதும், வாசிக்கும் பழக்கத்தை வளர்ப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தது. சிறுகதைகள் என்று சொன் னாலே அதில் கதையாசிரியர் இந்திரா சௌந்தர்ராஜனுக்குத் தனி அறிமுகம் தேவையில்லை. 2015ஆம் ஆண்டு வரை 700க்கும் மேற்பட்ட சிறுகதைகளை அவர் எழுதியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனுடனான (இடக்கோடி) கலந்துரையாடலில் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று சிறுகதைகள் எழுதுவது பற்றிய உத்திகளைத் தெரிந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்