விமான மறுபதிவு கட்டணம் நீக்கம்

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த பயங்கரவாத தாக்கு தலை அடுத்து விமானம் மூலம் ஜகார்த்தாவிலிருந்து கிளம்பிச் செல்பவர்களுக்கும் அங்கு செல் பவர்களுக்கும் மறுபதிவு கட்ட ணத்தைச் சில விமானச் சேவை கள் நீக்கியுள்ளன. இந்த ஏற்பாடு அடுத்த சில வாரங்களுக்கு நடப்பில் இருக்கும் என்று தெரிவிக் கப்பட்டது.

ஜகார்த்தாவுக்குச் சென்று வரும் விமானச் சேவைகள் எப்போதும்போல இயங்கி வருவ தாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், டைகர்ஏர் சிங்கப்பூர், ஜெட்ஸ்டார் ஆகிய விமானச் சேவைகள் தெரிவித்தன, இம்மாதம் 14ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஜகார்த்தாவுக்குச் செல்ல அல்லது அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல விற்பனையான விமானப் பயணச் சீட்டுகளுக்கான மறுபதிவு கட்டணத்தை நீக்குவ தாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டது.

இந்தச் சலுகையைப் பயன் படுத்தி மறுபதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் தங்கள் பயணத்தைத் தொடங்க வேண்டும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!