அரசாங்கத்தின் ஐந்து முக்கிய இலக்குகள்

அடுத்த ஐந்தாண்டு கால ஆட்சியில் சிங்கப்பூர் அரசாங்கம் ஐந்து முக்கிய இலக்குகளை நிறைவேற்ற வேண்டியிருப்பதாக அதிபர் டோனி டான் கெங் யாம் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் முடிந்து நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் நேற்று 13வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்று உரையாற்றியபோது அதிபர் டோனி டான் இவ்வாறு பேசினார்.

"சிங்கப்பூரைப் பாதுகாப்புமிக்க நாடாக கட்டிக்காத்தல், பொருளியலைப் புதுப்பித்தல், அக்கறைமிக்க சமூகத்தைப் பேணி வளர்த்தல், நகர்ப்புற நிலத் தோற்றத்தை மாற்றியமைத்தல், நாட்டு நிர்மாணத்தில் சிங்கப்பூரர்களை ஈடு படுத்தி, பங்கெடுக்கச் செய்தல் ஆகிய ஐந்து இலக்குகளை அரசாங்கம் தனது இந்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் செய்து முடிக்க வேண்டும்," என்று டாக்டர் டான் வலியுறுத்தினார்.

"முதலாவதாக, நமது பாதுகாப்பில் முதலீட்டைத் தொடர்ந்து, அரசதந்திரத் தின் மூலம் அனைத்துலக உறவுகளை விரிவுபடுத்த வேண்டும். நமது இறை யாண்மையைக் கட்டிக்காக்க முடியா விடில் நமது வாழ்வாதாரத்தையும் நாம் பாதுகாக்க இயலாது. "ஐஎஸ், பயங்கரவாத மிரட்டல்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளன. பயங்கரவாதம் வெளிநாட்டில் இருந்து மட்டும் வராது, அது உள்நாட்டிலேயே வேர்விடும் என்பதை உலகெங்கும் நிகழ்ந்த தாக்குதல்கள் காட்டுகின்றன.

ஒரு பயங்கரவாதத் தாக்குதல் உயிருக் கும் உடலுக்கும் சேதம் விளைவிப்பது மட்டுமின்றி சமூகப் பிணைப்பையும் சுக்குநூறாக்கி விடலாம். ஆகையால் நமது சமூகம் ஐக்கியமானதாகவும் மீண் டெழும் தன்மை கொண்டதாகவும் தொடர்ந்து நீடிக்கவேண்டும்," என்று அதிபர் டான் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!