மனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்

எஸ். வெங்கடேஷ்வரன்

சிங்கப்பூரை உலக விண்வெளிப் பயண வரைபடத்தில் நிலைநிறுத்த மு ய ன் று கொ ண் டி ரு க் கி ற து ‘கோஸ்பேஸ்’ எனும் உள் ளூர் திட்டம். அதில் பொறி யாளராகப் பணியாற்றி வருகி றார் விமானங்கள் மீதும் விண் வெளித் துறை மீதும் அதிக ஆர்வம்கொண்ட 26 வயது திரு பூ.கணேஷ் (படம்).

எனினும் இவர் கடந்து வந்த பாதை சுமுகமாக இருக்கவில்லை. மாணவப் பருவம் என்றால் படிப்பு, விளையாட்டு, நண்பர் களுடன் இன்பமாகப் பழகும் பருவ காலங்கள் என நம் நினைவுக்கு வரும். ஆனால் 12 வயதிலேயே நாசிப் படலப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் திரு கணேஷ். 2004ஆம் ஆண்டில் புற்றுநோய் அவரை முதலில் தாக்கியபோது, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக ‘கீமோதெரபி’ சிகிச்சை பெற வேண்டியிருந்தது. முழுமையாகக் குணமடைய ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் எடுத்தன.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போதிலும் மனந்தளராமல் தன் சிறு வயதுக் கனவை நனவாக்க திரு கணேஷ் கடுமையாக உழைத்தார். சுமார் ஐந்து வயதி லேயே விமானங்கள், டரோன்ஸ், விண்வெளிப் பயணம் போன்ற விஷயங்களில் அதிக நாட்டம் காட்டினார்.

தொடக்கக் கல்லூரிக்குப் போக தேவையான மதிப்பெண் களைச் சாதாராண நிலை தேர்வில் திரு கணேஷ் பெற வில்லை. இருப்பினும், நன்யாங் பலதுறை தொழிற்கல்லூரியில் ‘ஏரோனோடிகல் அண்ட் ஏரோஸ் பேஸ்’ என்ற பாடத் துறையைத் தெர்ந்தெடுத்து அதில் பட்டயம் பெற்றார்.

17 வயதில் ட்ரோன் எனும் ஆளில்லா விமானத்தை உரு வாக்குவதையும் மின்னணுவியல் சார்ந்த பட்டறைகளை நடத்தும் நிறுவனத்தையும் தமது சக நண்பர்களுடன் அவர் ஆரம்பித் தார். இதுவரை அந்த நிறுவனம் நடத்திய நூற்றுக்கும் மேற்பட்ட பட்டறைகளில் கிட்டதிட்ட 2,000 மாணவர்கள் கலந்துகொண்டு உள்ளனர். பலதுறைத் தொழிற் கல்லூரியில் சிறப்புத் தேர்ச்சி பெறவே அவர் நன்யாங் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் பாடத் துறையில் பட்டப் படிப்பை மேற் கொள்ளும் வாய்ப்பையும் பெற் றார். தாம் விரும்பிய துறையில் படிப்பு, கையில் ஒரு தொழில் என எல்லாம் தமது எண்ணம் போல் சென்றுகொண்டிருந்த போது புற்றுநோய் பிரச்சினை மீண்டும் தலைதூக்கியது. சிறு வயதில் செய்துகொண்ட ‘கீமோதெரபி’ சிகிச்சையின்போது பயன்படுத்தப்பட்ட கதிர்வீச்சு களின் பாதிப்பு அவரைத் தொடர்ந்து விரட்டியது.

கடந்த ஆண்டு மீண்டும் புற்றுநோய் அவரைத் துன்புற வைத்தது. புற்றுநோயைப் பிரதி பலிக்கும் கட்டி ஒன்று மீண்டும் அவரது மூக்கில் உருவாக, அதை அகற்ற அறுவை சிகிச்சை யைத் திரு கணேஷ் மேற்கொள்ள வேண்டி இருந்தது.

அதனால் திரு கணே‌ஷின் முகத் தோற்றமே மாறிட அவர் அதைச் சரிசெய்ய முக மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை யையும் மேற்கொள்ள நேரிட்டது. இவற்றுக்குப் பிறகு மீண்டும் அவரது புற்று நோய் பிரச்சினை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. “புற்றுநோய் மீண்டும் வந்த போது நான் என் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் இருந்தேன். ஏற்கெனவே படிப்பில் சற்று பின்தங்கியிருந்தேன். அந்நேரத் தில் நோய் வந்தது எனக்கு ஒரு பெரிய இடியாக இருந்தது.

சிகிச்சை ஒருநாளில் முடிந்தாலும் குணமடைவதற்கான காலம் பல மாதங்கள் ஆகின. இந்த நேரத்தில், சாப்பிடுவது, பேசுவது போன்ற தினசரி செயல்கள்கூட கடினமாக இருந்தது,” என்றார் திரு கணேஷ். இருப்பினும், தொடர்ந்து தமது பட்டப்படிப்பை வெற்றி கரமாக அவர் முடித்தார். அதன் பிறகுதான் அவருக்கு சிங்கப் பூரின் ‘கோஸ்பேஸ்’ திட்டத்தில் இணைந்து செயலாற்ற வாய்ப்பு கிடைத்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா

15 Jul 2019

தலைமைத்துவத் தேடலில் இளையர்கள் 

பண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)

08 Jul 2019

வாழ்க்கைக்கும் வழிகாட்டும் கல்வியாளர்கள்