தைவான் வரலாற்றில் முதல் பெண் அதிபர்

தைவான் வரலாற்றில் முதல் பெண் அதிபர் தைப்பே: தைவானில் எதிர்க்கட்சி வேட்பாளர் சாய் இங் வென் அந்நாட்டின் முதல் பெண் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். தைவானில் நேற்று நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக முன்னேற்றக் கட்சி மகத்தான வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் திருவாட்டி சாய், வாக்குகள் எண்ணப் பட்டபோதே கிட்டத்தட்ட 6 மில்லியன் வாக்கு வித்தியாசத் தில் முன்னிலையில் இருந்தார். ஆளும் கட்சித் தலைவர் எரிக் சூ தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆளும் கட்சியிலிருந்து விலகப் போவதாக அறிவித்த எரிக் சூ, தேர்தலில் வெற்றி பெற்ற திருவாட்டி சாய்க்கு தமது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார். நேற்று 8-.30 மணியளவில் திருவாட்டி சாய்க்கு 59.5 விழுக்காடு வாக்குகள் கிடைத் திருந்தன. அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் சாதனை அளவாக அவர் அதிக வாக்கு களைப் பெறுவார் என்று கூறப்பட்டது.

நேற்று 4 மணியளவில் கட்சி தலைமையகத்திற்கு வந்த திருவாட்டி சாய், செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றும் பின்னர் ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றுவார் என்றும் தகவல்கள் கூறின. புதிய அதிபரைத் தேர்வு செய்ய மக்கள் நேற்று வாக்களித்தனர். நேற்று நடந்த தேர்தலில் ஏராளமானோர் வாக்களித்ததாக தகவல்கள் கூறின.

ஆரம்ப கட்ட முடிவுகள் வெளியானதும் மகிழ்ச்சியில் திளைக்கும் ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் ஆதரவாளர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!