தாக்குதலின் பின்னணியில் மறைந்திருப்பவர்களைக் கையாளுதல்

சிங்கப்பூரின் ஆகப்பெரிய இணையத் தாக்குத லில் பிரதமர் லீ சியன் லூங் உட்பட 1.5 மில்லியன் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரிய அளவிலான பதில் நடவடிக்கை மேற்கொள் ளப்படுவது அவசியம்.

உள்ளளவில், தாக்குதல் எவ்வாறு நடந்தது என்பது பற்றிய முறையான பகுப்பாய்வுடன் தொடங்கி, எதிர்காலத்தில் இதேபோன்ற தாக்கு தல் மறுபடியும் நிகழாமல் தடுப்பதற்கு என்னென்ன செய்யமுடியும் என்பது ஆராயப்பட வேண்டும். விசாரணைக் குழு அமைக்கப்படுவது ஒரு நம்பிக்கையளிக்கும் தொடக்கம். நிரந்தர விளைவு களைக் கொண்ட நடவடிக்கைகள் அவசரத்தில் எடுக்கப்படாதிருப்பதை இது உறுதி செய்கிறது. விசாரணைக் குழு தம் பணியைச் செய்வதற்கு இப்போது நேரமும் இடமும் கொடுக்கப்பட வேண் டும். என்ன நடந்தது என்பதைக் கண்டறிய, அவ சியமான கேள்விகள் அனைத்தையும் கேட்பதற்குக் குழு தயாராக இருக்கவேண்டும்.

ஆனால், இணையம் அல்லது வேறு வகை யான பாதுகாப்பு அத்துமீறல்களைப் போலவே, இந்தச் சம்பவத்திலும் மிகையான செயல்பாடு கள் மேற்கொள்ளப்படக்கூடிய ஆபத்து நிலவு கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குக் கூடுதல் செலவாகும். அந்நடவடிக்கைகளை அமலாக்கு வதற்குத் தேவைப்படும் பணமாகவோ அல்லது அமைப்பின் செயலாற்றல் குறைவதன் மூலமா கவோ இச்செலவு ஏற்படலாம். மேலும், ஒவ்வொரு புதிய நடவடிக்கையாலும் கிடைக்கக்கூடிய கூடு தல் பாதுகாப்பின் பலன் குன்றுவதையும் எதிர் நோக்க நேரிடும்.