குவாகாடோகு: மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா ஃபாசோவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 பேர் பலியான தாகவும் 15 பேர் காயமடைந்த தாகவும் ஒரு மருத்துவமனையின் தலைவர் கூறினார். அந்த ஹோட்டலில் இருந்த பலரை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத் திருந்ததைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அந்த ஹோட்டலை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.
பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த பிணையாளிகளில் இதுவரை 126 பேரை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளதாகவும் காயமடைந்த சுமார் 33 பேர் பத்திர மாக வெளியேற்றப்பட்டுள்ளதாக வும் அந்நாட்டு தொடர்புத் துறை அமைச்சர் ரிமிஸ் டான்டிஜினோவ் கூறினார். பயங்கரவாதிகளின் பிடியில் இன்னும் பலர் சிக்கியிருப்பதால் அவர்களை மீட்க, பிரெஞ்சு சிறப்புப் படையினரின் உதவியுடன் பர்கினா படையினர் கடுமையாக சண்டையிட்டு வருவதாகவும் அமைச்சர் சொன்னார்.
பர்கினா ஃபாசோ தாக்குதலில் 23 பேர் பலி