மூன்று அமைப்புகளுக்கு வளர்தமிழ் இயக்கத்தின் திறன் மேம்பாட்டு நிதி ஆதரவு

தமிழ் மொழி பயன்பாட்டிலும் மேம் பாட்டிலிலும் இலக்கியம், கலை வழியாகத் தொடர்ந்து செயல்பட அவாண்ட் தியேட்டர், சிங்போரிமா, ஓம்கார் ஆர்ட்ஸ் ஆகிய மூன்று அமைப்புகள் வளர்தமிழ் இயக்கத்தின் திறன் மேம்பாட்டு நிதி ஆதரவைப் பெற்றுள்ளன. ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தமிழ் மொழி விழாவில் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் படைக்கவும் திறனா ளர்களை உருவாக்கவும் 2017ல் இந்தத் திறன் மேம்பாட்டு நிதி ஆதரவுத் திட்டத்தை வளர்தமிழ் இயக்கம் தொடங்கியது.

அவாண்ட் தியேட்டர் 2017 நவம்பர் மாதம் 35 மாணவர்களுக்கு நான்கு நாள் பயிலரங்கை நடத்தி யது. நாடகம் எழுதுவது, நடிப்பது, இயக்குவது, ஒளியமைப்பு, நிர் வாகம் என அனைத்திலும் அவர் களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பயிற்சி பெற்ற பல மாணவர்கள், “நம் காட்டினிலே” என்ற நாடகத்தை இந்த வார இறுதியில் மேடையேற்றுகிறார்கள். “பயிலரங்கின்போது பயிற்சி பெற்ற மாணவர்கள், நிபுணத்துவ மேடையில் தங்கள் திறன்களை வெளிப்படுத்தவும் தமிழ் மொழி யைப் பயன்படுத்தவும் இந்த நாடகம் வாய்ப்பளித்துள்ளது. இதற்கு வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவு உதவியாக அமைந்தது,” என்று அவாண்ட் தியேட்டரின் இயக்குநர் திரு ஜி.செல்வநாதன் கூறினார்.

“நம் காட்டினிலே” நாடகத்துக்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் மாண வர்கள். உடன் அவாண்ட் தியேட்டரின் இயக்குநர் ஜி.செல்வநாதன். எட்டு வயது முதல் 15 வயது வரையுள்ள மாணவர்கள் இயக்கி, நடிக்கும் இந்த நாடகம் சனி, ஞாயிறு இரு நாட்களும் குட்மேன் ஆர்ட்ஸ் சென்டரில் மேடையேறுகிறது. படம்: அவாண்ட் தியேட்டர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தவில், ஹர்மோனியம் போன்ற இசைக் கருவிகளைக் கொண்டு இசையோடு கலந்த நகைச்சுவை நிகழ்ச்சியை சிங்கப்பூரில் படைக்கவிருக்கும் அலக்ஸாண்டர்.

18 Apr 2019

இசைச்சுவையுடன் நகைச்சுவை