நாட்டிய நாடகமாக அகதிகளின் வாழ்க்கை

இயற்கைப் பேரிடர்கள், போர், அர சியல் கலவரம்/பிரச்சினைகள் கார ணமாக சொந்த நாட்டிலிருந்து பிற நாடுகளில் தஞ்சம் நாடுபவர்களே அகதிகள். ஆனால் சமுதாயத்தில் பலரோ அகதிகளின் வாழ்க்கையைப் பற்றி தவறாகப் புரிந்துகொண்டிருக் கிறார்கள். அவர்கள் நாடோடிகள் அல்லது பிற நாடுகளுக்குப் பிழைப்பு தேடி செல்பவர்கள் என்று தவறாக எண்ணுகிறார்கள். அகதிகளின் வாழ்க்கையைப் பற்றி சிங்கப்பூரில் மீண்டும் ஒரு நாட்டிய நாடகத்தை அப்சரஸ் ஆர்ட்ஸ் மேடையேற்றுகிறது. ‘அகதி’ நாட்டிய நாடகம் இன்றும் நாளையும் எண் 6, பாம் ரோடு எனும் முகவரியில் உள்ள சிக்லாப் சவுத் சமூக மன்ற உள்ளரங்கில் இரவு 7.00 மணிக்கு நடைபெறும்.

அப்சரஸ் ஆர்ட்ஸ் கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமியின் இளமைக் கால அகதி வாழ்க்கை அனுபவத்தின் பிரதிபலிப்பே ‘அகதி’ நாட்டிய நாடகம். ஐநா அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ள ‘நம் இளையர் களின் உணர்வு வெளிப்பாடுகள்’ என்னும் கவிதைத் தொகுப்புப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட சில கவிதைகள், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, மகா கவி சுப்ரமணிய பாரதியார், பாரதிதாசன், கவியரசு கண்ண தாசன் ஆகியோரின் கவிதை வரிகளைக் கொண்டு நாட்டிய நாடகத்திற்கு இசை அமைக் கப்பட்டுள்ளது.