சமரசம்: அனைத்துலக அளவில் உன்னத நிலையில் சிங்கப்பூர்

ஐக்கிய நாடுகள் அமைப்பில், அனைத்துலக வர்த்தகச் சட்ட ஆணையம் என்ற ஒரு பிரிவு இருக்கிறது. உலக வர்த்தகத்தில் நிறுவனங் களுக்கு இடையிலான பிரச்சினைகள் காரண மாக ஏற்படக்கூடிய செலவு, காலவிரயம், உற் பத்தித்திறன் குறைவு போன்ற பாதிப்புகளைத் தவிர்ப்பது இந்த ஆணையத்தின் நோக்கம்.

உலக, வட்டார நிறுவனங்கள் தங்களுக்கு இடையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள சமரச அணுகுமுறை அடிப் படையிலான ஓர் உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்று ஐநா முடிவு செய்தது. இத்தகைய உடன்பாட்டை ஏற்படுத்த பல நாடுகளும் உதவின. குறிப்பாக சிங்கப்பூர் பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாட்டை உரு வாக்குவதிலும் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத் திக்கொண்டது.

சிங்கப்பூர், உலக வர்த்தகத்தைச் சார்ந்து இருக்கும் நாடு. அதே வேளையில், அனைத் துலக சட்டத்தை மிகவும் மதித்து நடக்கும் நாடு.

இங்கு ஏற்கெனவே உலகத் தரமிக்க முதல் தர நீதிமன்றங்கள் இருக்கின்றன. அவை அனைத்துலக ரீதியில் அங்கீகரிக்கப்பட் டவை. மிகவும் போற்றப்படுபவை. உயர்தர பஞ்சாயத்து நடுவர் முறை ஏற் பாடும் சிங்கப்பூரில் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொண்ட ஐநா உறுப்பு நாடுகள், புதிதாக ஏற்படுத்தப்படும் உடன்பாட்டுக்கு ‘சிங்கப்பூர் சமரச உடன்பாடு’ என்றே பெயர் சூட்டலாம் என ஒருமனதாக இணக்கம் கண்டன. நியூயார்க் நகரில் இந்த ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 13ஆம் தேதி வரையில் நடந்த இந்த ஆணை யத்தின் 51வது கூட்டத்தில், சிங்கப்பூரில் அடுத்த ஆண்டில் நடக்கும் ஒரு மாநாட்டின் போது அந்த உடன்பாட்டில் ஐநா நாடுகள் கையெழுத்திடலாம் என்றும் முடிவு செய்யப் பட்டது.

சிங்கப்பூர் பெயரில் ஐநா அமைப்பு ஏற் படுத்தி இருக்கும் முதல் உடன்பாடு இது தான். சமரச தீர்வுகள் மூலம் ஏற்படக்கூடிய இணக்கங்களை நிறுவனங்கள் நடைமுறைப் படுத்துவதை சிங்கப்பூர் சமரச உடன்பாடு எளிதாக்கும். இதனால் எல்லை கடந்து நடக் கும் வர்த்தகம் மேம்படும்.