அமெரிக்காவுடன் உடன்பாடு காண வடகொரியா விருப்பம்

சோல்: அமெரிக்காவுடன் அமைதி உடன்பாடு காண விரும்புவதாக வடகொரியா மீண்டும் தெரிவித் துள்ளது. அத்துடன் தென்கொரி யாவும் அமெரிக்காவும் சேர்ந்து மேற்கொள்ளும் ராணுவப் பயிற்சி நிறுத்தப்பட வேண்டும் என்றும் வடகொரியா வலியுறுத்தியுள்ளது. வடகொரியா அதன் அணுவாயுத சோதனைகளை நிறுத்த வேண்டும் என்றால் மேலே குறிப்பிட்ட அதன் கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

கூட்டுப் பயிற்சியை நிறுத்துவது குறித்து அமெரிக்கா பரிசீலிக்குமா என்பது தெரிய வில்லை. வடகொரியா சில நாட்களுக்கு முன்பு ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை மேற் கொண்டது. வடகொரியாவின் அந்த சோதனைக்கு தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் அமெரிக்கா அதன் நட்பு நாடான தென்கொரியாவுக்கு அதன் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அணுவாயுதத்தை எடுத்துச் செல்லக்கூடிய ஒரு விமானத்தை தென்கொரிய வான்வெளியில் பறக்கவிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!