இந்தியர்களுக்கான முடக்கு வாதமும் மூட்டழற்சியும்

முடக்கு வாதமும் இந்தியர்களும் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் எதிர்ப்புச் சக்தி எலும்புகளைச் சுற்றிலுமுள்ள திசுக்களைத் தாக்கும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால், எலும்புகள் நிரந்தரமாக சேதம் அடையக்கூடும். இந்தியர்களில் 1=2 விழுக்காட்டினருக்கு முடக்கு வாதம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, நீரிழிவு நோயாளிகளுக்கு முடக்கு வாதம் ஏற்படக்கூடிய ஆபத்து அதிகமாக இருப்பதாகத் தெரியவந்தது.

மொத்தம் 139 மில்லியன் இந்தியர் களுக்கு நீரிழிவு நோயும் நீரிழிவு நோய்க்கான முந்திய நிலையும் இருப்பதாக இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் கணக்கிட்டுக் கூறியுள்ளது. பலவகையான நோவுகளுக்கு வீட்டில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு பொருள் மஞ்சள். கடைகளில் கிடைக்கும் வலிபோக்கும் மருந்துகளை உட்கொண்ட நோயாளிகளோடு ஒப்பிடுகையில் வலி அளவுகளில் எந்தவித வித்தியாசமும் இல்லை என அண்மை ஆய்வு காட்டுகிறது.

இந்தியர்களிடையில் “முடக்கு வாதம்” குறைவாகக் கண்டறியப்படுவதற்கு இது ஒரு காரணமாக இருக்கக்கூடும். முதுமை மூட்டழற்சியும் இந்தியர்களும் முதுமை மூட்டழற்சியால் அவதியுறும் இந்தியர்களின் எண்ணிக்கை 1990களிலிருந்து 2000ஆம் ஆண்டு களில் 46% அதிகரித்திருப்பதாக அண்மை புள்ளிவிவரங்கள் காட்டு கின்றன. “உடல்பருமன் அதிகரித்து வருவது” இதற்குக் காரணமாக இருக்கலாம். உடல் பருமனால் உங்கள் முழங்கால்கள் அதிக எடையைத் தாங்கிக் கொள்ள நேரிடுகிறது. இதனால், அவை விரைவாகத் தேய்ந்து விடக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கு கின்றன. இந்தியர்களின் உடல் பருமன் விகிதம் 23.4 விழுக்காட்டிலிருந்து (1995) 29.8 விழுக்காட்டுக்கும் (2000), பிறகு 40.8 விழுக்காட்டுக்கும் (2006) அதிகரித்து உள்ளது.

மூட்டழற்சியால் ஓரளவு சிரமம் ஏற்பட்டாலும், யாருமே தங்களது மூட்டுகளின் இயக்கத்தைப் பெருமளவு இழந்துவிட வேண்டியதில்லை. மூட்டழற்சி மோசமடையும் வேகத்தைக் குறைக்க எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பல்வேறு உத்திகளை (உடலியக்கப் பயிற்சி, மருந்துகள், ஊசிவழி ஏற்றும் மருந்துகள்) பயன்படுத்த முடியும். முழங்கால் மூட்டை மாற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அதிக வளைவுத்தன்மையை அளிக்கவல்ல அறுவை சிகிச்சை உத்திகளும் உள்ளன.

முழங்கால்களை மடக்கி உட்காருதல், வழிபாட்டுக்காக மண்டி இடுதல் போன்ற கலாசாரப் பின்னணி களையும் தனிப்பட்ட தேவைகளையும் இந்த உத்திகள் கவனத்தில் கொள்கின்றன. என்னிடம் வந்த ஓர் இந்திய ஆடவர், முழங்கால்கள் இரண்டும் கடுமையாக வலிப்பதாகச் சொன்னார். இதனால் வழிபாடு, பேரப்பிள்ளைகளுடன் விளையாடுதல் போன்ற அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறினார். அவரைப் பரிசோதித்துப் பார்த்தபோது, இரு முழங்கால்களிலும் முதுமை மூட்டழற்சி இருப்பது தெரியவந்தது. இடது முழங்காலில் மூட்டழற்சி மோசமாக இருந்தது.

- டாக்டர் குர்பால் சிங், மருத்துவ ஆலோசகர், இடுப்பு, முழங்கால் அறுவை சிகிச்சைப் பிரிவு, எலும்பியல் அறுவை சிகிச்சைத் துறை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற இருக்கும் இந்திய
கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இந்தியக் கைவினை, விளையாட்டுகள் நிகழ்ச்சி.
இந்த இலவச நிகழ்ச்சி இம்மாதம் 30, 31வது தேதிகளில் நடைபெறும். சிங்கப்பூர் படம்: மரபுடைமை விழா

18 Mar 2019

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2019