சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ரங்கோலி கோலம்

வைதேகி ஆறுமுகம்

சிங்கப்பூர் வரும் 9ஆம் தேதி தனது 53வது தேசிய தினத்தை மிகச் சிறப்பான முறையில் கொண் டாட உள்ளது. இந்தத் தருணத் தில் தேசிய தினத்தை மையக் கருவாகக் கொண்டு 3,104 சதுர அடி பரப்பளவில் உருவாக்கப் பட்டுள்ள திருமதி சுதாதேவி ரவிச்சந்திரனின் ரங்கோலி கோலம் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. சிங்கப்பூர் மரினா பே நீர்க் கரையின் மேம்பாடுகளைச் சித்திரிக்கும் நோக்கில் ரோஜா நிற மெர்லையன், நீல நிற நீர்க் கரை, மஞ்சள் நிற பின்னணியுடன் கூடிய பிரகாசமான நிறங்களைக் கொண்டு ரங்கோலி கோலம் உருவாக்கப்பட்டிருந்தது.

கிட்டத்தட்ட 20 மீட்டர் நீளத் திலும் 14 மீட்டர் அகலத்திலுமான இக்கோலத்தைப் போடுவதற்கு கிட்டத்தட்ட 600 கிலோ எடை யிலான அரிசி தேவைப்பட்டது. இந்த அரிசி அரைத்து மாவாக் கப்பட்டு, அதனுடன் 12 நிறங் களைச் சேர்த்து ரங்கோலி பொடி தயாரிக்கப்பட்டது. சிங்கப்பூர் சாதனைப் புத்தகத் தில் ரங்கோலி கோலத்தை இடம் பிடிக்கச் செய்வதற்காகத் தயாரிக் கப்பட்ட இந்தக் கலவை முழு வதையும் ஒட்டுமொத்தமாக சேக ரிக்க 46 வயது திருமதி சுதா தேவிக்கு 10 நாட்கள் தேவைப் பட்டன.

சிறு வயதிலிருந்தே ரங்கோலி கோலத்தின் மீது அளவில்லா விருப்பம் கொண்டிருக்கும் இவர், தன்னுடைய மகளையும் இம் முயற்சியில் ஈடுபடுத்த விரும்பி னார்.