புக்கிட் மேரா சமூக மன்றத்தில் பட்டிமன்றம்

புக்கிட் மேரா சமூக மன்ற அரங் கில் கடந்த மாதம் 28ஆம் தேதி சனிக்கிழமை இரவு ஏழு மணிக்கு “ஒரு குடும்பத்தின் முன்னேற்றத் திற்கு பெரிதும் பாடுபடுவோர் ஆண்களே! பெண்களே!” என்ற தலைப்பில் ஒரு பட்டிமன்றம் நடைபெற்றது. புக்கிட் மேரா சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்திருந்த இந்த பட்டி மன்றத்தைக் காண சுமார் 250 பேர் வந்திருந்தனர். பட்டிமன்றத்திற்கு முன்பாக செயற்குழு உறுப்பினர் திருமதி கிருஷ்ணம்மாள், வந்திருந்த பார்வையாளர்களிடம் கேள்வி பதில் அங்கத்தை நடத்திப் பரிசு களை வழங்கினார்.

நடுவர் ரெ.சோமசுந்தரம் முன்னுரை நிகழ்த்தி தலைப்பு பற்றி சிறு விளக்கம் கொடுத்தார். ஆண்களே! எனும் அணியில் அண்மையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று தற்போது பொறியாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு அருள் ஓஸ்வின், மொழி பெயர்ப்பாளர் சுபா‌ஷினி கலைக் கண்ணன், தொலைக்காட்சி நடிகர் முத்துசாமி லிங்கம் பேசினர். பெண்களே! எனும் அணியில் தொலைக்காட்சி நடிகர் ரெ.நா. புரவலன், முன்னாள் வானொலிப் படைப்பாளர் ஆர். திலகராணி, தொலைக்காட்சி நடிகர் சிவகுமார் ஆகியோர் பேசினர்.

(இடமிருந்து) திரு அருள் ஓஸ்வின், திரு முத்துசாமி லிங்கம், குமாரி சுபா‌ஷினி கலைக்கண்ணன், பட்டிமன்ற நடுவர் திரு ரெ. சோமசுந்தரம், புக்கிட் மேரா இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவி திருமதி கவிதா, குமாரி ஆர். திலகராணி, திரு சிவகுமார், திரு ரெ.நா. புரவலன். படம்: புக்கிட் மேரா சமூகமன்றம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற இருக்கும் இந்திய
கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இந்தியக் கைவினை, விளையாட்டுகள் நிகழ்ச்சி.
இந்த இலவச நிகழ்ச்சி இம்மாதம் 30, 31வது தேதிகளில் நடைபெறும். சிங்கப்பூர் படம்: மரபுடைமை விழா

18 Mar 2019

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2019