‘கோ.சாரங்கபாணியும் தமிழ் முரசும்: இன்றைய பார்வை’ பாலபாஸ்கரனின் நூல் சிங்கப்பூரின் ஆக உயரிய இலக்கியப் பரிசை வென்றது

இர்ஷாத் முஹம்மது

‘கோ.சாரங்கபாணியும் தமிழ் முர சும்: இன்றைய பார்வை’ எனும் நூலுக்காக முன்னாள் பத்திரி கையாளரும் ஒலிபரப்பாளரும் பிரபல எழுத்தாளருமான பால பாஸ்கரனுக்குச் சிங்கப்பூர் இலக் கியப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் மூன்று பிரிவுகளில் ஈராண்டு களுக்கு ஒருமுறை சிங்கப்பூர் புத்தக மன்றம் வழங்கும் இலக்கிய பரிசை, தமிழ்ப்பிரிவில் இம்முறை இந்த நூல் மட்டுமே வென்றது. இலக்கியப் பரிசுடன் $10,000 ரொக்கமும் வெற்றியாளருக்கு நேற்று வழங்கப்பட்டது. நான்கு அதிகாரத்துவ மொழி களிலும் கவிதை, புதினம், புதின மல்லாதவை என மூன்று பிரிவு களில் பரிசுகள் வழங்கப்பட்டன.

“சிங்கப்பூர் தமிழ்ச் சமூ கத்தைப் பாதித்த, பல அறியப் படாத நிகழ்வுகளைத் தமிழ் முரசு நாளிதழின் தலையங்கங்களைக் கொண்டும் எழுத்தாளரின் பத்தி ரிகையாளர் அனுபவத்தைக் கொண்டும் இந்த நூலின் வழி அறிய முடிகிறது,” என்று புதின மல்லாதவை பிரிவில் இந்த நூலை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த நீதிபதிகள் கூறினர்.

இலக்கியப் பரிசுடன் திரு பாலபாஸ்கரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்