அதிக உடற்பயிற்சியால் அலைக்கழிக்கப்படும் மனநலம்

உடற்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கு பொதுவாக நல்ல விளைவுகளையே ஏற்படுத்து கிறது. இதய நோய்கள், உடற் பருமன், பக்கவாதம், நீரிழிவு போன்றவற்றிலிருந்து விடு படவோ அல்லது அவற்றின் தாக் கத்தைக் குறைக்கவோ உடற் பயிற்சி பெரிதும் உதவுகிறது. மிதமான உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி போன்றவை மனதுக்கும் இதமளிப்பதாகவே கூறப்படுகிறது. ஆனால் ‘தி லான்செட் சைக் கியாட்ரி’ எனப்படும் சஞ்சிகை யில் அண்மையில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று உடற்பயிற்சி, மனநலம் ஆகியவற்றுக்கு இடை யேயான தொடர்பு பற்றிக் குறிப் பிட்டுள்ளது.

அதில், ஒரு நாளைக்கு 90 நிமிடங்களுக்கு மேல் சைக் கிளோட்டுதல், சீருடல்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்பவர் களின் மனநலனில் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மனநலத்தின் மீதான உடற்பயிற்சியின் தாக்கத்தை ஆய்வு செய்யும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட 12 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. உடற்பயிற்சியின் வகை, உடற்பயிற்சி செய்யும் நேர அளவு, எவ்வளவு நேர இடை வெளியில் உடற்பயிற்சி செய்யப் படுகிறது என்ற அளவு, எவ் வளவு தீவிரமாக உடற்பயிற்சி செய்யப்படுகிறது என்பது போன்ற தகவல்கள் திரட்டப்பட்டு அவை மனநலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் ஆராயப்பட்டது.

உடற்பயிற்சியில் ஈடுபடு வோர், ஈடுபடாதவர்கள் ஆகி யோரிடம் மனநிலை பற்றிய தகவல்களும் சேகரிக்கப்பட்டன. மிகத்தீவிரமாக உடற்பயிற்சி யில் ஈடுபடுவோரிடம் அலைக் கழிக்கப்படும் மனநிலை இருப்ப தாக ஆய்வில் தெரியவந் துள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற சிகரம் மின் அகராதி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோருடன் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவர் விக்ரம் நாயர். படம்: சிங்கைத் தமிழ்ச் சங்கம்

09 Aug 2019

சிகரம் மின் அகராதி வெளியீடு