ரொக்கமில்லா பொருளியலை நோக்கி தொடர் பயணம்

சிங்கப்பூர் ரொக்கமில்லா பரிவர்த்தனை முறை மாற்றத்துக்கு நாட்டின் வங்கிகள் சங்கம் மீண்டும் தனது பங்கை ஆற்றியுள்ளது. தற்பொழுது ‘பேநவ்’ எனப்படும் ஒருவர் மற்றவரின் கைத்தொலைபேசி எண் அல்லது அடையாள அட்டை எண் என இரண்டில் ஒன்றின் மூலம் செய்யும் பணப்பரிவர்த்தனை முறை நடப்பில் உள்ளது. இதைப்போல், ‘பேநவ் கார்ப்பரேட்’ எனப்படும் புதிதாக அறிமுகம் கண்டுள்ள பணப்பரிவர்த்தனை முறை நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப் பட்டுள்ள பிரத்தியேக அடையாள எண் மூலம் மற்ற வர்த்தகங்கள், நிறுவனங்கள், அரசு அமைப்புகளுடன் தங்களுடைய வங்கி எண்ணை இணைத்துக்கொண்டு கொடுக்கல் வாங்கலில் ஈடுபடலாம். ‘பேநவ்’ மூலம் இனி ஒன்பது குறிப்பிட்ட வங்கிகளின் வாடிக்கை யாளர்கள் வர்த்தகங்களுடனும் அரசாங்கத் துடனும் பணப் பரிவர்த்தனை வைத்துக் கொள்ளலாம்.

மின்னியல் வங்கிச் சேவை முறை பரவி வருவதற்கு இரண்டு புள்ளிவிவரங்களே சான்று. ‘பேநவ்’ பணப் பரிவர்த்தனை முறை சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இந்த மாதம் வரை இந்த சேவைக்கு 1.6 மில்லியன் பேர் பதிவு செய்துகொண் டுள்ளனர். இதன்மூலம், $1.2 பில்லியன் அளவிலான பணம் கைமாறியுள்ளது. புதிய ‘பேநவ் கார்ப்பரேட்’ சேவையைப் பொறுத் தவரை அது அமோக வரவேற்பை பெற்று உள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கி ஓசிபிசி வங்கியில் மட்டும் இந்த சேவையில் பங்குபெற வங்கியின் 10 புதிய வர்த்தக வாடிக்கை யாளர்களில் 9 வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள் என்றால் இதற்கான வரவேற்பு எந்த அளவு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அத்துடன், குறைந்தது 50,000 சிறிய, நடுத்தர வர்த்தகங்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த ‘பேநவ் கார்ப்பரேட்’ சேவைக்குப் பதிவு செய்துகொள்வர் என்று டிபிஎஸ் வங்கி தனது பங்குக்கு முன்னுரைத் துள்ளது. மேலும் பல நிறுவனங்களும் வர்த்தகங்களும் இந்த பணப்பரிவர்த்தனை முறை எவ்வாறு செயல்படப்போகிறது என்பதை ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருக்கின்றன. இதற்கு ஆகும் செலவு ஒரு நடைமுறைப் பிரச்சினை.

இதிலிருக்கும் மற்றோர் அம்சம் பாதுகாப்பு தொடர்பிலானது. இந்தச் சேவை, வங்கித் துறை ஏற்படுத்தியுள்ள மிக உயர்ந்த பாதுகாப்பு தரநிலைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் பணப் பரிவர்த்தனை முறையில் வேகமாக, பாதுகாப்பான முறையில் பணப் பரிமாற்றம் இருப்பதுடன், இதில் பங்கேற்கும் 19 வங்கிகளும் கிட்டத்தட்ட உடனடியாக சிங்கப்பூர் நாணயத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து வேறோர் வங்கிக் கணக்குக்கு மின்னிலக்க முறையில் மாற்ற வழி செய்கிறது. இந்த சேவையின் மூலம் பணம் பெற பதிவு செய்துகொள்வோர் ஒரு பக்கம் இருக்க, பணத்தைப் பெறுபவர் இன்னார் என பணம் அனுப்புகிறவர் தெரிந்து கொள்ள முடிகிறது.

இதனால், பணப் பரி மாற்றம் செய்கிறவர் தமது பணம் சரியான நபருக்குத்தான் போய்ச்சேருகிறது என்ற உத்தரவாதத்தைப் பெறுகிறார். இதேபோல், பணப் பரிவர்த்தனையில் ஈடுபடும் அமைப்பு களும் தங்கள் பணத்தை பெறுவது யார் அல்லது எந்த அமைப்பு என்பதை உறுதி செய்துகொள்ளலாம். ஒருவேளை பணத்தை அனுப்புகிறவர் தவறுதலாக ஒருவருக்கு பணத்தை கொடுத்துவிட்டால், அவர் உடனே பணம் பெற்றுக்கொண்டவரைத் தொடர்பு கொண்டு அந்த பணத்தை திருப்பிக் கேட்கலாம். அதைப் பெற்றுக்கொண்டவரும் பணத்தை முறையாக திருப்பித் தந்துவிட சட்டப்படி கடமைப்பட்டவர். ஒருக்கால் பணத் தைத் தவறாகப் பெற்றுக்கொண்டவரிடமி ருந்து எந்த பதிலும் கிடைக்காவிட்டால், சம்பந்தப்பட்ட வங்கியுடன் பணம் அனுப்பியவர் தொடர்புகொள்ளலாம். இது போல் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன.

வேறொரு கோணத்தில் பார்க்கும்பொழுது இணைய ஊடுருவல் அபாயம் இருக்கவே இருக்கிறது. இது விவரிக்க முடியாத பாதிப் புகளை ஏற்படுத்தும் என்பது கண்கூடாகத் தெரிகிறது. இருந்தாலும், ‘பேநவ் கார்பபரேட்’ திட்டம் தங்கு தடையற்ற பொருளியல் நட வடிக்கைகளை நோக்கிச் செல்லும் பயணத் தில் மேலும் ஒருபடி, விவேக நகரை நோக்கிச் செல்லும் நமது லட்சியத்தின் உயிர்நாடி. பாதுகாப்பு அம்சம் நாம் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என்றாலும் அது சிங்கப்பூரின் மின்னிலக்க எதிர் காலத்துக்குத் தடையாக அமையக்கூடாது. மின்னிலக்க வங்கிச் சேவை முறையில் முன் னேறும் அதே வேளையில் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும் என்று நம்பலாம். -ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்