அதிக நேரம் எரியும் தீமிதிக் கட்டைகள்

வீ. பழனிச்சாமி

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடை பெறும் மிகப்பெரிய திருவிழாவா கத் திகழ்கிறது தீமிதித் திருவிழா. இத்திருவிழாவில் பயன்படுத் தப்பட்டு வரும் தீக்கட்டைகள் சாதாரண மரத்திலிருந்து வெட்டப் பட்டவை அல்ல. மேலும் இவை சிங்கப்பூரில் கிடைப்பதும் அல்ல. “தீக்குழியில் பயன்படுத்தப்படும் தீக்கட்டைகள் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்திலிருந்து தரு விக்கப்படுகின்றன. “இது கடந்த 50 ஆண்டு களுக்கும் மேலாக மேற்கொள்ளப் பட்டு வரும் ஒரு வழக்கம். மலேசிய வனத்துறையின் அனுமதி யுடன் தீக்கட்டைகள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எங்கள் ஆலயத்துக்குக் கொண்டு வரப் படுகின்றன,” என்று விளக்கினார் ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாகக் குழுச் செயலாளர் திரு எஸ். கதிரேசன், 51.

“ஆண்டுதோறும் பொதுவாக 18,000 கட்டைகளை நாங்கள் வாங்குவோம். ஆனால் இந்த ஆண்டு 22,000 கட்டைகள் வாங்கியிருக்கிறோம். தீக்கட்டை களுக்கான தேவை அதிகரித் திருப்பதால் இந்த ஆண்டு அதிக மாக வாங்கியுள்ளோம். “தீக்கட்டைகளை வாங்கும் பணி தீமிதித் திருவிழாவுக்கு மூன்று மாதங்களுக்கு முன்ன தாகவே தொடங்கி விடுகிறது.

தீக்கட்டைகளைக் கவனமாக அடுக்கி வைக்கின்றனர் ஸ்ரீ மாரியம்மன் கோயில் தொண்டூழியர்கள். படம்: த.கவி